252
திருமணம் முடிந்த பிறகு செழியனும் அவனது மனைவியும் ஊருக்கு வருகிறார்கள்.
தேவி தனது மாமியார் வீட்டில் முதல்முறையாக காலடி எடுத்து வைக்கிறாள்.
மாமியார் லக்ஷ்மி தனது மருமகளுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்கிறாள்.
பின்பு பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க சொல்லி தேவியிடம் கூறுகிறாள்.
பின்பு இருவருக்கும் பால் பழம் கொடுக்கிறார்கள்.
தேவியை தனியாக கூப்பிட்டு லட்சுமி இனிமேல் வீட்டில் காலையில் நீ எழவேண்டும்.
நீதான் வாசலில் கோலம் இட வேண்டும்.
காலையிலேயே குளித்துவிட்டு பூஜை அறையில் தினமும் விளக்கேற்ற வேண்டும்.
என்று பல விஷயங்களை தேவிக்கு ஒன்றன்பின் ஒன்றாக பாடம் எடுத்து கொண்டிருக்கிறாள்…
லட்சுமி.
மாமனார் சரவணன் வந்து
“போதும் லட்சுமி இன்னைக்கு எல்லாத்தையும் சொல்லி அவள பதற வைக்காத போகப்போக அவளே தெரிஞ்சுக்குவா…”
“மா நீ போய் செழியன் கிட்ட கொஞ்ச நேரம் பேசு போ மா”
” சரி மாமா” சொல்லிட்டு போகிறாள் தேவி.
செழியன் அவனது அறையில் உட்கார்ந்து இருக்க தேவி அங்கு செல்கிறாள்.
பயத்தில் இருந்த தேவியைப் பார்த்த செழியன்.
“இங்கே வா இங்கு வந்து உட்காரு ..தேவி நடுக்கமா இருக்கா…”.
ஏன் என்னை பார்த்து பயப்படுற…பயப்படாத நீ உங்க வீட்ல எப்படி இருப்பியோ அதேபோல இங்கேயும் இருக்கலாம். என்ன பார்த்து நீ பயப்படவும் அவசியம் கிடையாது. சகஜமா இரு சரியா”
அப்படின்னு தேவிக்கு ஆறுதலா பேசுறான். செழியனின் இந்த பேச்சு தேவிக்கும் ரொம்ப பிடித்து போகிறது. .
நேரமாகிவிட்டதால் இருவரையும் இரவுக்குள் பெண் வீட்டில் தங்க வைக்க வேண்டும் என்பதற்காக லட்சுமி அவளது உறவினரும் அழைத்துப்போக ஏற்பாடு நடக்கிறது.
தேவிக்கு வேறு புடவை கொடுத்து அலங்காரம் செய்து அவள் அம்மா வீட்டுக்கு அழைத்து செல்கிறாள்.
அவள் அம்மா வீடு வந்ததும். லட்சுமி அவளது உறவினரும் மாப்பிள்ளை மற்றும் பெண்ணை கூட்டிக்கொண்டு சம்மந்தி வீட்டில் அனுப்பி வைத்து அண்ணா பாத்துக்கோங்க..
மூணு நாள் கழிச்சு மருவுக்கு கூட்டிட்டு வந்து விடுங்கள் சொல்லிட்டு கிளம்புகிறாள்..
இரவு சாந்தி முகூர்த்தத்திற்கு நேரமானதால் தேவியை மாப்பிள்ளை அறைக்குள் அனுப்பிவைத்து
அனைவரும் வெளியே சென்று விட்டார்கள்.
பார்க்கலாம் இவர்களுக்குள் காதல் மலரும் ஆ என்று…….
-
ஷண்முக பூரண்யா. அ
Good
Your Story is short and sweet nice keep it up
Thank you all and keep support me