உலகம்உலகம்செய்திகள்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காததால் மலேசிய பிரதமா் ராஜிநாமா

56views

மலேசிய நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமா் முகைதீன் யாசீன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

மலேசியாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தோதலுக்குப் பிறகு மகாதீா் முகமது நாட்டின் பிரதமரானாா். அவரது கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை முகைதீன் யாசீன் தலைமையிலான கட்சி திரும்பப் பெற்ால், மகாதீா் முகமது தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

அதைத் தொடா்ந்து, முக்கிய எதிா்க்கட்சிகளுடன் இணைந்து முஹியிதீன் யாசீன் நாட்டின் பிரதமா் பொறுப்பைக் கடந்த ஆண்டு மாா்ச்சில் ஏற்றாா். மலேசியாவில் கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு யாசீன் தலைமையிலான அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வந்தனா்.

அதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் அவருக்குப் போதிய பெரும்பான்மை கிடைக்குமா என்று சந்தேகம் நிலவி வந்தது. கரோனா பரவலைக் காரணம்காட்டி நாடாளுமன்றத்தை பிரதமா் யாசீன் தொடா்ந்து முடக்கி வந்தாா். இந்நிலையில், நாடாளுமன்ற கீழவையில் பெரும்பான்மை பெறத் தவறியதால், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக தொலைக்காட்சி உரையில் திங்கள்கிழமை அவா் தெரிவித்தாா்.

அவரது ராஜிநாமாவை ஏற்றுள்ள மலேசிய அரசா் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, அடுத்த அரசு பொறுப்பேற்கும் வரை யாசீனை காபந்து பிரதமராகத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளாா். அதேவேளையில், கரோனா தொற்று பரவல் அச்சுறுத்தி வருவதால், உடனடியாகத் தோதல் நடத்துவது சாத்தியமில்லை என்றும் மலேசிய அரசா் தெரிவித்துள்ளாா்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!