கவிதை

வேய்ங்குழலோசை சிரிக்கும் பிள்ளைத்தமிழ்

85views
புள்ளினங்களின் இசையோடு புலரும் அதிகாலையின் அழகில்,
பூத்துக்குலுங்கும் மலர்களின் புன்னகையில்,
துள்ளித்திரியும் மான்களின் துறுதுறுப்பில்,
தோகை விரித்தாடும் வண்ணமயிலின் நடனத்தில்,
குயிலின் இனிய கானத்தில்,
ஆர்ப்பரிக்கும் அருவியின் கம்பீரத்தில்,
சலசலக்கும் ஓடையில் துள்ளிகுதிக்கும் மீன்களின் எழிலில்,
வெண்பனி இரவின் முழுமதி அழகில்,
மயக்கும் வேய்ங்குழலோசையில்,
கள்ளமில்லா பிள்ளைச்சிரிப்பழகில்
நின் முகவடிவே கண்டேனடா……
என் மாயக்கண்ணா…….!!!
  • கோமதி, காட்பாடி

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!