விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன்.. யாருக்கு வாய்ப்பு?

93views

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. மழை பெய்து வருவதால், இந்திய அணி இண்டோரில் உள்ள மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த தொடரில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிளேயிங் லெவன் குறித்து காணலாம்.

டாப் 3 வீரர்கள்

இந்திய அணியின் தொடக்க வீரராக ஷிகர் தவான் களமிறங்குகிறார். அவர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அடிக்கும் ரன்களை பொறுத்து தான் அவருடைய எதிர்காலம் இருக்கும். அவருக்கு ஜோடி யார் என்பது தான் குழப்பம் உள்ளது. முதல் வாய்ப்பு இஷான் கிஷனுக்கு தான் என்றாலும், தொடக்கத்தில் இருவரும் இடதுகை பேட்ஸ்மேன் என்பது பின்னடைவாக கருதப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் நம்பர் 3வது வீரராக களமிறகுவார்.

நடுவரிசையில் போட்டி

வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீனியர்கள் இருக்கும் போது ஐயருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால், இந்த தொடர் அவருக்கு ஒரு வரப்பிரசாதம் போல் ஆகும். 5வது வீரராக தீபக் ஹூடா அல்லது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் இருவருக்குமே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் நடு வரிசையில் ஜடேஜா இடம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .

வேகப்பந்துவீச்சாளர்கள்

இதே போன்று ஹர்திக் பாண்டியாவின் இடம் சர்துல் தாக்கூருக்கு கிடைக்கலாம். சுற்பந்துவீச்சாளர் இடத்தில் சாஹல் நீடிப்பார். வேகப் பந்துவீச்சாளர்கள் இடத்தில் முகமது சிராஜ் மற்றும் ஆவேஷ் கான் இடையே கடும் போட்டி ஏற்படும். இதே போன்று பிரசித் கிருஷ்ணாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். ஆர்ஸ்தீப் சிங்கும் இந்த தொடரில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

பிளேயிங் லெவன்

1, ஷிகர் தவான், 2, இஷான் கிஷன்/ ருத்துராஜ், 3, சூர்யகுமார் யாதவ், 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, தீபக் ஹூடா/ சஞ்சு சாம்சன், 6, ஜடேஜா, 7, சர்துல் தாககூர். 8, சாஹல், 9, முகமது சிராஜ், 10, ஆவேஷ் கான், 11, பிரசித் கிருஷ்ணா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!