உலகம்உலகம்

விண்வெளியில் நீரூடன் கோள் : ‘நாசா’ தொலைநோக்கி தகவல்

58views

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ அனுப்பியுள்ள ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி நடத்திய ஆய்வில் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளில் தண்ணீர் மேகங்கள் மூடுபனி இருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
விண்வெளியில் மிக மிக தொலைவில் உள்ள கோள்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்வதற்காக அதிக திறன் உடைய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
இது நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவு சென்று சூரியனை சுற்றியவாறு ஆய்வுப்பணியை செய்து வருகிறது.இந்த தொலைநோக்கி வாயிலாக எடுக்கப்பட்ட முதல் வண்ணப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றுமுன்தினம்வெளியிட்டார்.இந்நிலையில் இந்த தொலைநோக்கி மூலம் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வு குறித்து நாசா நேற்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
விண்வெளியில் தெற்கே இருந்து 1150 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கோள் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு ஒளி ஆண்டு என்பது 9.46 லட்சம் கோடி கி.மீ. தொலைவாகும்.

‘வாஸ்ப்96 – பி’ என்ற அந்த கோள் சூரியனைப் போன்ற மிகப் பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.

ஒரு முறை அந்த நட்சத்திரத்தை சுற்றி வர மூன்றரை நாட்களாகிறது. அதிக அளவில் வாயுக்களுடன் 538 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் அந்த கோள் உள்ளது. மிகவும் பெரியதாகவும் உப்பிய நிலையிலும் உள்ள அந்த கோள் சுற்றி வரும்போது ஆய்வு செய்யப்பட்டது.
அதில் இருந்து கிடைத்த ஒளி அலைக்கற்றைகளை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் அந்தக் கோளில் நீர், மேகங்கள், மூடுபனி இருந்ததற்காக அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
பூமியைத் தவிர மனிதர்கள் வாழ்வதற்கு சாத்தியமுள்ள கோள்கள் குறித்த ஆய்வில் இது மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!