உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ், புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் தனது நிறுவனத்தின் தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் விண்கலத்தின் மூலம் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு சென்று வந்தார். இது மிகப்பெரும் மைல்கல் சாதனையாக பார்க்கப்பட்டது. இந்தநிலையில் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகளான 74 வயதான லாரா ஷெப்பர்ட் சர்ச்லே உள்ளிட்ட 6 பேரை கொண்ட குழு புளூ ஆரிஜின் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியது. லாரா ஷெப்பர்ட்டின் தந்தையான ஆலன் ஷெப்பர்ட் கடந்த 1961-ம் ஆண்டு மே 5-ந் தேதி புளோரிடா மாகாணத்தில் இருந்து மெர்குரி விண்கலத்தில் விண்வெளிக்கு பயணித்து, அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் என்கிற பெருமையை பெற்றார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புளூ ஆரிஜின் நிறுவனத்துக்கு சொந்தமான வான் ஹார்ன் ஏவுதளத்தில் இருந்து ஆலன் ஷெப்பர்ட் உள்ளிட்ட 6 பேருடன் நியூ ஷெப்பர்ட் விண்கலம் விண்ணுக்கு புறப்பட்டது. இந்த பயணம் சுமார் 10 நிமிடங்களுக்கு நீடித்தது. நியூ ஷெப்பர்ட் விண்கலம் 100 கிலோமீட்டர் உயரம் வரை பயணித்தது. அதன் பின்னர் அந்த விண்கலம் மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது.
160views
You Might Also Like
கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இரத்த பிளேட்லெட் தான முகாம்
ஷார்ஜா : கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இரத்த பிளேட்லெட் தான முகாம் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர்...
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம்
துபாய் : பல்வேறு மனிதநேய மற்றும் சமூக நலப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும், துபாய் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கிரீன் குளோப் அமைப்பின்...
துபாய் கர்டின் பல்கலைக்கழககத்தில் சிறப்பு கருத்தரங்கம்
துபாய் : துபாயில் உள்ள ஆஸ்திரேலியா நாட்டின் முன்னணி பல்கலைக்கழகமான கர்டின் பல்கழகத்தில் “மீள்திறனைத் தாண்டி: சிக்கலான சூழல்களிலும் தொடர்ச்சியான மாற்றங்களிலும் தலைமைத்துவம்” சிறப்பு கருத்தரங்கம் நடந்தது....
துபாயில் குடும்ப நிலைத்தன்மை பயிலரங்கம்
துபாய் : துபாய் கலாச்சாரத்துறையின் சார்பில் கிரீன் குளோப் அமைப்பின் ஒத்துழைப்பில், சுற்றுசூழல் ஆர்வலர் அப்துல் காதர் சீறிய முன்னெடுப்பில் Generation Shaper (தலைமுறை உருவாக்கம் )...
துபாய் டிவைன் பிளாக் மஜ்லில் மீலாது விழாவில் நூல் வெளியீடு
துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லில் மீலாது விழா மிகவும் சிறப்பாக நடந்தது. இந்த விழாவுக்கு மஜ்லிஸின் தலைவர் முஹிப்புல் உலமா முஹம்மது மஹ்ரூப் தலைமை...




