விளையாட்டு

மீண்டும் வருகிறார் ரகானே: துலீப் டிராபியில் வாய்ப்பு

83views
துலீப் டிராபியில் இந்தியாவின் ரகானே களமிறங்க உள்ளார்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், உள்ளூர் முதல் தர போட்டி தொடரான துலீப் டிராபி 59வது சீசன் (2022-23) தமிழகத்தில் வரும் செப்.
8-25ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் மேற்கு மண்டல அணி சார்பில் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரகானே 34, விளையாட உள்ளார். இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்., தொடரின் போது இடுப்பு பகுதியில் காயமடைந்த இவர், எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட இவர், துலீப் டிராபிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார். தவிர, உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியை வழிநடத்த உள்ள இவர், விரைவில் சர்வதேச போட்டிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியங்க் கேப்டன்: இந்தியா வரவுள்ள நியூசிலாந்து ‘ஏ’ அணி, 3 நான்கு நாள் (செப். 1-4, 8-11, 15-18, இடம்: பெங்களூரு), 3 ஒருநாள் (செப். 22, 25, 27, இடம்: சென்னை) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதில் நான்கு நாள் போட்டிக்கு கேப்டனாக குஜராத் துவக்க வீரர் பிரியங்க் பன்சால் நியமிக்கப்படலாம். இவர், கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்க தொடரில் இந்தியா ‘ஏ’ அணியை வழிநடத்தினார். இதேபோல ஹனுமா விஹாரிக்கும் கேப்டன் வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்த ஆண்டு நடந்த ரஞ்சி கோப்பையில் அதிக விக்கெட் (45) சாய்த்த மும்பையின் ஷாம்ஸ் முலானி, அதிக ரன் (982) குவித்த சர்பராஸ் கான், அறிமுக ரஞ்சி கோப்பை போட்டியில் 122 ரன் விளாசிய மத்திய பிரதேசத்தின் ரஜத் படிதர், ஜம்மு-காஷ்மீரின் உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் நான்கு நாள் போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!