190
இரு பத்து ஆண்டுகளாக அவள் பரிச்ச யம். பார்வைப் பரிச்சயம். பேசிய சொல் ஒன்று கூட இல்லை. முறைத்தபடிதான் பார்ப்பாள். அல்லது பார்த்தால் முறைப் பாள்.
அவளிடம் பேசும் எண்ணமென எதுவும் இருந்ததில்லை. அவள் தேவதை .. என்றெல்லாம் புரூடா விடத் தயாரில்லை. சாதாரண ஒரு இல்லத்தரசியின் தோற்றச் செழுமை. திடமான உடல். மாநிறம்.
சிறுகடை ஒன்றில் இருப்பாள். சென்ற மாதம் எதோ வாங்கின போது சடசட வென நிறுத்தி வைத்துப் பேசினாள். அவள் மகிழ்ச்சி, கண்ணீர், துயரம், சொத்து பத்து, அப்பாவி மகன், நல்ல கணவர், நல்ல மாப்பிள்ளை, மருமகள் ராட்சஷி பேரக் குழந்தை என சகலமும் வெளிவந்து விழுந்தன. ஸார்.. என விளித்தே முழுக்கதையையும் கொட்டி னாள்.
அலுவலகம் ஞாபகம் வந்தது. இப்படி த்தான் எதுவும் கேட்காமலே பல கதைகள் மடியில் வந்து விழுந்தன. பதிலுக்கு என் கதையென ஒன்றையும் சொல்ல முடிந்த தில்லை எவரிடமும். அப்படி எதாவது ஒன்றை முயற்சித்தால் .. ணா.. அதெல் லாம் எங்களுக்கெதுக்கு..ணா.. நீயே எல்லாத்தையும் சரி பண்ணிடுவேணா.
இதைத்தான் திரும்பத் திரும்ப கேட்டேன்.
இவள் எப்படி அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாளென தெரியல. அறிமுகமற்ற நிலையில் முதல் பேச்சிலேயே எப்படி மனம் முழுக்கத் தொறந்து காட்டினா ளெனத் தெரியல.
அதன் பிறகு இருமாதங்களாக ஆளெக் காணோம். திரும்பி வந்து ஊருக்குப் போயிருந்தன். பெண்ணுக்கு ரெண்டா வது பிரசவம்.. அதான்..
எந்தூரூ நீங்க ?.. எந்த ஊரைச் சொல்ல ?. பிறந்த ஊரா ? கட்டிக் கொடு த்த ஊரா ? வாழ்ந்த ஊரா ? வாழும் ஊரா ? என் மகளை கட்டிக் கொடுத்த ஊரா ? என் பையனுக்கு பெண் எடுத்த ஊரா ?.. இதுல எது என் ஊர் ?.. என் வாழ்வோட தொடர்புடைய எல்லா ஊரும் என் ஊர்தானே ??.. ஆகாசத்தைக் காட்டி … கடைசியா போகப் போற அந்த ஊர்தான சொந்த ஊர்.. அந்த ஊருக்கு போயிட்டன்னா .. எந்த ஊருக் கும் போக வேண்டியதில்ல. கடைசியாக அவள் சென்று வந்த ஊர் பேரையும் சொன் னாள்.
எத்தனை அழகாகப் பேசுகிறாள். கண் களை இடுக்கி, உதட்டைச் சுழித்தபடி உதிரும் சொற்களில் ஒரு ஆற்றொழு க்கைப் பார்க்கிறேன். இருவது வருஷத் துக்கு முந்தி இவளிடம் பேசியிருந்தா.. இத்தனை நிதானமும் பக்குவமும் இருந்திருக்காது.
இன்றைக்கும் கட்டுக்குலையாத தோற்றமிருந்தாலும் அவள் பேச்சில் அழகிய மனமே முன் நிற்கிறது..
நீங்க எழுதுன புத்தகம் ஒன்னு கேட்டன். இன்னும் தரலை. எங்க மாப்பிள்ளை புத்தகம் படிப்பாரு. கொண்டுபோய் கொடுப்பேன்.. எனக்கும் ஒரு எழுத்தாளர தெரியும்னு பெருமை பேசுவேன்.
அப்படியே என்னதான் எழுதியிருக்கே ன்னும் படிச்சுப்பேன் .. நான் இல்லை ன்னாலும் என் வூட்டுக்காரர் இருப்பாரூ. அவர் கிட்ட கொடுத்துட்டுப் போங்க… ஒன்னும் குடி முழுகிடாது.
-
நிமோஷினி
add a comment