136
இது பாரபட்ச தேசம்
அரசால் வந்த நாசம்.
புண்ணிய பூமி,
வெளி வேசம்
திருட்டுத்தனத்தில் ஆவேசம்.
தூய்மை இந்தியா,
குப்பைகள் அள்ள
குப்பைகளாய்
குழந்தைகள் மனதால்துள்ள,
பணிவிடை பெற்று
இறுமாப்பில் அனுபவிக்கும்
செல்வந்தன் நகைத்து எள்ள.
உலையில் சோற்பார்த்து
தலையில் எண்ணை பார்த்து
இடையில் உடைபார்த்து
இவைமட்டல்ல,
கொடுமைகள் பல பார்த்து
விடியலில்லா முகம் பார்த்து.
மதமில்லை
இனமில்லை
தாயில்லை
தந்தையில்லை
ஓய்வெடுக்க
இடவுமில்லை
சீரில்லை
சிறப்பில்லை
பகுத்தாய
கல்வியுமில்லை.
தந்தை
தாய் யார்?
முன்னெழுத்து,
விழி பிதுங்கும்
கண்ணெழுத்து.
கேள்விக்குறியில்
தலையெழுத்து.
தெரு நாய்க்கு
இவர்கள் சொந்தம்.
ஊணிலும்
உறக்கத்திலும்
இனைபிரியா
பந்தம்.
திரைச்சீலையில்
பொய்கதையில்
ஏழைக்காக
போராட்டம் ;
கோடிகளில்
கொண்டாட்டம்.
தீண்டாமையின்
உச்சகட்டம்
பார்பானிய
மாற்றத்தின்
மிச்சகட்டம்
திரைச்சீலையை
தீக்கிறையாக்க வேண்டிய
நாசகட்டம்.
வெங்காயம்,
அன்னைதெரசாவாக
அழுது நடிக்கும்
அரசியல்
அம்மாக்கள் எத்தனை
அப்பாக்கள் எத்தனை
வெங்காயம் இன்றி
வெங்காயம்.
கல்வியிலே
. கள்ளத்தனம்
ஆசிரியரில்லா
குள்ளத்தனம்
ஏழைக்கு
அரசு செய்யும்
கீழ்தனம்.
வேகாத அரிசியை
வேகச்செய்து,
போடத துணியில்
சீருடைசெய்து
சாகாமல் சாகடிப்பார்
சண்டாள கல்விமுறை.
சேற்றில் உழுவான்
சோறின்றி
காட்டில் அலைவான்
கூடின்றி
ஆற்றில் துவைப்பான்
கோ மணமின்றி.
இது எந்தநாடு ;
விவசாயநாடா, இல்லை
தொழில் புரட்சி நாடா.
நாட்டில்
நாடாதவனின்
குத்தகை பேசி
சுதந்திரம் அடகில் நாடு.
இது சாபக்கேடு.
நாட்டை ஆழலாம்
மிதியடி தைத்தவனும்
தேனீர் விற்றவனும்
கனவு கானுங்கள்
முன்னொரு காலத்தில்
அரியணை ;
செல்வந்தன்,
சர்வகுற்றம் புரிந்தவன்,
ஊரை எரித்து
உலையில் போட்டவன்
சாத்தானின்
மறு உருவம்
நீதிபதி
நீதியின்றி
இதையத்தை
கல்லாக்கி
சிலையான
தீர்ப்பு.
பின் ஏழை
எப்படி வாழ்வான்
இது பாரபட்ச தேசம்……
பாவம் நிறைந்த தேசம்……
-
கருங்கல் கண்ணன்
add a comment