உலகம்உலகம்

பாக்., ஆப்கனில் ராணுவம் குவிக்க சீனா திட்டம்

66views
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள சீனா அந்த இரு நாடுகளிலும் சிறப்பு புறக்காவல் மையங்கள் அமைத்து தங்கள் ராணுவத்தை குவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பி.ஆர்.ஐ. எனப்படும் ‘பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ்’ என்ற திட்டம் வாயிலாக சாலை மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை சீனா முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில் மத்திய ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனா அதற்கான வேலையை துவங்கி உள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் சிறப்பு புறக்காவல் மையங்களை அமைத்து தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை குவிக்க திட்டமிட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ராணுவ தலைமை தளபதி ஜெனரல் குவாமர் ஜாவேத் பாஜ்வா ஆகியோரை பாகிஸ்தானுக்கான சீன துாதர் நாங் ராங் சமீபத்தில் சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இரு நாடுகளிலும் சீன திட்டங்களின் பாதுகாப்பு, அதை நிறைவேற்றி வரும் சீன குடிமக்களின் பாதுகாப்புக்காக இந்த மையங்களை அமைக்க அனுமதிக்க சீனா வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.ஏற்கனவே ‘யுவாங் வாங் 5’ உளவு கப்பலை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைத்து நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள சீனா பாகிஸ்தான் ஆப்கனிலும் ஆதிக்கம் செலுத்த திட்டமிட்டு வருகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!