இந்தியா

நேரு,வாஜ்பாய் முட்டாள்தனத்தால் திபெத், தைவானை இழந்தோம்: சுப்பிரமணியன் சுவாமி விளாசல்

53views
பிரதமர் மோடி உணர்வற்று இருக்கிறார், ஜவஹர்லால் நேரு, அடல் பிஹாரி வாஜ்பாயின் முட்டாள்தனத்தால்தான் திபெத், தைவான் சீனாவின் ஒருபகுதி என்று இந்தியர்கள் ஒப்புக்கொண்டோம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி உணர்வற்று இருக்கிறார், ஜவஹர்லால் நேரு, அடல் பிஹாரி வாஜ்பாயின் முட்டாள்தனத்தால்தான் திபெத், தைவான் சீனாவின் ஒருபகுதி என்று இந்தியர்கள் ஒப்புக்கொண்டோம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தென் சீனக் கடலில் இருக்கும் தைவானுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதேபோன்று இமயமலையில் இருக்கும் திபெத்தையும் சீனா தனது ஆட்சிக்கு உட்பட்டபகுதி என்று உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் தைவானுடனும், இந்தியாவுடனும் பிரச்சினையில் சீனா ஈடுபட்டு வருகிறது.
தைவான் சீனாவிலிருந்து பிரிந்தாலும், இன்னும் சீனா தைவான் தங்களின் ஒருபகுதி என்று கூறி வருகிறது. தைவானுக்கு எந்த வெளிநாட்டுத் தலைவர்கள் செல்வதையும் சீனா விரும்புவதில்லை. தைவானின் சுதந்திரம், சுயாட்சி குறித்து எந்த நாடு பேசினாலும் சீனா கடுமையாக எதிர்க்கும்.
அதேபோல திபெத் எல்லை, இந்தியாவின் எல்லைப்பகுதியிலும் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு இந்திய ராணுவத்துடன் தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறது. இந்நிலையில் தைவானுக்கு இரு நாட்கள் பயணமாக வந்திருந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசிக்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் “ ஜவஹர்லால் நேரு, அடல் பிஹாரி வாஜ்பாயின் முட்டாள்தனத்தால், திபெத், தைவான் ஆகியவை சீனாவின் ஒருபகுதி என்று இந்தியர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தியாவுடன் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையும் சீனா மதிக்கவில்லை, லடாக்கின் பல பகுதிகளை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால், பிரதமர் மோடி உணர்வற்று இருக்கிறார். எதையும் முடிவு செய்வதற்கு எங்களுக்கு தேர்தல் ஒன்று இருப்பதை சீனா தெரிந்து கொள்ள வேண்டும்” என விளாசியுள்ளார்.
அதாவது சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்தாலும், அங்கு ஜனநாயகம் என்ற அமைப்பே கிடைாயது. சர்வாதிகார ஆட்சிதான் இருக்கிறது. ஒற்றைக் கட்சிஆட்சி முறைதான் சீனாவில் நிலவுகிறது. அதிபர் ஜி ஜின்பிங் சொல்வதே சட்டமாகஇருக்கிறது. ஆனால் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, மக்கள் தேர்தல் மூலம் தங்களுக்கான தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றுதெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!