உலகம்

நேட்டோவில் ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் இணைய அமெரிக்க செனட் சபை ஒப்புதல்

63views

நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 150 நாட்களாக போர் செய்து வருகிறது. இதற்கிடையே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இந்த நடவடிக்கைக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!