இந்தியா

‘நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்’ பா.ஜ.க. ஆவேச தாக்கு

106views
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் விலகுவது இது முதல் முறையல்ல. 2013-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணி பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டபோது, நிதிஷ் குமார் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
2015-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சி, ராஷ்டிர ஜனதாதளம், காங்கிரஸ் கட்சியுடன் மகா கூட்டணி அமைத்து வெற்றி கண்டது. நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரி ஆனார்.
ஆனால் துணை முதல்-மந்திரி தேஜஸ்வியாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டால் அவரை பதவி விலக கூறி அவர் பதவி விலக மறுத்தபோது, நிதிஷ் குமார் (2017 ஜூலை 26) பதவி விலகினார். ஆனால் அடுத்து அவர் பா.ஜ.க.வுடன் மீண்டும் கரம் கோர்த்து முதல்-மந்திரி ஆனார்.
தற்போது பா.ஜ.க.வுடன் மோதல் ஏற்பட்டு மீண்டும் அந்த கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் நேற்று வெளியேறி உள்ளது. இதை பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கடுமையாக சாடினார்.
இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “2020 சட்டசபை தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு ஐக்கிய ஜனதாதளம் கட்சி நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. இதற்காக பீகார் மக்களால் அவர் (நிதிஷ் குமார்) தண்டிக்கப்படுவார்” என தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!