விளையாட்டு

‘தோல்விக்கு காரணம் இதுதான்’…இந்த 2 பேருதான் தோக்க வச்சுடாங்க: ரோஹித் அதிரடி!

76views

இந்தியா, இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.

Double Leaf symbol இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? அடுத்து என்ன நடக்கும்?
இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா 50, 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் தற்போது மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் 77 (39), லிவிங்ஸ்டன் 42 (29) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடித்தார்கள். இறுதிக் கட்டத்தில் ஹேரி ப்ரூக் 19 (9), கிறிஸ் ஜோர்டன் 11 (3) ஆகியோர் அதிரடி காட்டியதால், இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 215/6 ரன்களை குவித்தது. ராய் 27 (26), பட்லர் 18 (9) போன்றவர்கள் வழக்கம்போல சொதப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், 4ஆவது இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 55 பந்துகளில் 14 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 117 ரன்களை குவித்து கடைசிவரைப் போராடினார். அடுத்து ஷ்ரேயஸ் ஐயர் 28 (23) ரன்களை எடுத்தார்.

இறுதியில் 12 பந்துகளில் 41 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது மொயின் அலிக்கும், கிறிஸ் ஜோர்டனுக்கும் மட்டுமே தலா ஒரு ஓவர்கள் இருந்தது. அப்போது மொயின் அலி பந்துவீச்சில் சூர்யகுமார் 2 பவுண்ரி, ஒரு சிக்ஸர் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ஹர்ஷல் படேல் பவுண்டரி அடித்ததால், அந்த ஓவரில் 20 ரன்கள் கசிந்தது. கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜோர்டன் 3 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார்.

இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 198/9 ரன்களை மட்டும் சேர்த்து, 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, “வெற்றிபெற்றிருந்தால், நினைவில் நின்றிருக்க கூடிய சேசிங்காக இது இருந்திருக்கும். போராடியதை நினைத்து பெருமைப்படுகிறேன். டி20 பார்மெட்டில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து அசத்தி வருகிறார். நாளுக்கு நாள் அவரது ஆட்டம் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. எதிரணி சிறப்பாக பேட்டிங் செய்து எங்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தினார்கள்”

“மலான், லிவிங்ஸ்டன் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் எங்களை ஒரு படி பின்னோக்கி இழுத்து சென்றது. 4 ஓவர்களை ஒரு பௌலராக இருந்தால், அவருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கி பரிசோதிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம். இப்போட்டியில் கற்றுக்கொண்ட பாடங்கள் மூலம், அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்” எனத் தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!