உலகம்உலகம்

தைவானுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடை

63views

தைவானின் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதார தடை மற்றும் இறக்குமதி தடையை சீனா விதித்துள்ளது.

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெலோசி சென்றுள்ளார்.

அவருக்கு தைவான் அரசு உற்சாக வரவேற்பு அளித்துள்ளது. அதிபர் மாளிகைக்குச் சென்ற பெலோசியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்ற தைவான் அதிபர் சாய் இங்வென், அவருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் பேசிய சாய் இங்வென் , தைவானின் மிக முக்கிய நண்பர்களில் ஒருவர் பெலோசி என்றும், தைவானுக்கு அசைக்க முடியாத ஆதரவை அளித்துள்ள அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து மறைமுகமாகக் கறிப்பிட்ட சாய் இங்வென், ஜனநாயக நாடான தைவானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், தங்கள் நாட்டின் பாதுகாப்பு மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், எனினும், தைவான் ஒருபோதும் அடிபணியாது என்றும், நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

தைவானின் எதிர்க்கட்சியான கேஎம்டி கட்சியும், பெலோசியின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த சீனா, தற்போது தைவான் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

தைாவின் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள சீனா, அந்நிறுவனங்களின் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.

35 நிறுவனங்களின் 107 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளதாக தைவானின் விவசாய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கை தைவானுக்கு பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!