விளையாட்டு

தீபக் சாஹர் நீக்கம்: இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

161views
1-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கும் இந்திய-ஜிம்பாப்வே தொடரின் 2வது போட்டி ஹராரேயில் இன்று தொடங்கவுள்ளது, இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
தீபக் சாஹர் கடந்த போட்டியில் மீண்டும் வந்து அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஆனால் அவர் இந்தப் போட்டியில் இல்லை, காரணம் சொல்லப்படவில்லை, ஒருவேளை அவர் காயமடைந்திருக்கலாம் அல்லது ஏற்கெனவே உள்ள காயம் மறுபடியும் வேலையைக் காட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தீபக் சாஹருக்குப் பதில் சர்துல் தாக்கூர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளர். ஆசியக் கோப்பைக்கு கே.எல்.ராகுல் பார்முக்கு வரவேண்டும், சர்வதேச கிரிக்கெட்டில் இதைச் செய்ய டாஸ் வென்று முதலில் பேட் செய்ய வேண்டும். ஆனால் இந்த முறையும் கே.எல்.ராகுல், பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இது ஏன் என்று தெரியவில்லை.
மற்றபடி ஒரே மாற்றம்தான் தீபக் சாஹருக்குப் பதில் சர்துல் தாக்கூர். ஜிம்பாப்வே அணியில் கைட்டானோ என்ற வீரரும் டனகா சிவங்கா என்ற வீரும் வந்துள்ளனர்.
ஜிம்பாப்வே அணி தொடக்கம் சரியில்லை, கடந்த போட்டியில் 31/3, அதற்கு முன்பு 18/3, 27/3, 62/3 என்று முந்தைய 4 போட்டிகளில் சொதப்பியுள்ளனர், தொடக்க வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர், இந்தப் போட்டியில் கைட்டானோ வந்துள்ளார்.
இந்திய அணி: தவான், கில், ராகுல், இஷான் கிஷன், ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், சர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!