கவிதை

தாய் தமிழ் மாெழி

214views
மொழி
ஒரு மனிதனின்
பிறப்புத்
தொப்புள்கொடி…..
மொழிகள் பல
கற்றாலும்
பெற்றாலும்
தாய்மொழி
தமிழ்
தலையாய
மொழி. …..
தாய்ப்பால்
அருந்துவதை
போன்ற
ஒரு உணர்வு
தமிழ்மொழியைப்
படிக்கும்போது
இருக்கும் …..
தமிழ்
படிக்கும்போது
ஒவ்வொரு
முறையும்
புதிதாக
அர்த்தங்கள்
பிறக்கும்….
மொழி
தன்னைப்
பேச
மொழி எடுத்துக்கொண்ட
வடிவமே மனிதன்…..
அதுவும்
மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான
தமிழை
நாம் பேசுகிறோம்
என்பது பெருமை…
எந்த மொழிக்கும்
இல்லாத சிறப்பு
தமிழ்
மொழிக்கு
உண்டு…
இலக்கணம் …
இலக்கியம் …
இதிகாசங்கள் …
பாடல்கள்….
சிற்றிலக்கியங்கள் கொட்டிக்கிடக்கும் ‘
காெடையே
தமிழ்மொழி….
தமிழ் மொழியை
தலைப்பாகையாகத்
தலையில் சூட்டலாம்….
பிற மொழியைக்
கைக்குட்டையாய்
கையில் ஏந்தலாம்….
என்னைப்
பொறுத்தவரை
தாய் தமிழ் மொழி
தாய்ப்பால்
போன்றது…
‘கவிதாயினி’ தேவி

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!