செய்திகள்தமிழகம்

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!!

202views

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!