தமிழகம்

கிரீன் குளோப் நிறுவனரும் தலைவருமான திருமதி ஜாஸ்மின் அபூபக்கர் அவர்களுக்கு அன்னை தெரசா விருது

20views
அன்பு, கருணை, மனிதநேயம் – வாழ்வின் உண்மையான செல்வம் இவ்வுலகிற்கு நாம் எதையும் கொண்டு வரவில்லை; இவ்வுலகை விட்டு செல்லும் போதும் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இந்தச் சிறிய பயணத்தில், நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவது நாம் சேர்த்த செல்வங்களோ, பெற்ற பதவிகளோ அல்ல; பிறரின் வாழ்வில் நாம் விதைக்கும் அன்பு, கருணை, மனிதநேயம் ஆகிய உயரிய பண்புகளே.
பணம், நிலம், வீடு, பதவி ஆகியவை நிலையற்றவை. ஆனால், அன்பால் ஒரு இதயத்தைத் தொடுவதும், கருணையால் ஒரு கண்ணீரைத் துடைப்பதும், மனிதநேயத்தால் ஒரு வாழ்வில் நம்பிக்கையை விதைப்பதும் என்றென்றும் அழியாத செல்வமாகும். மனிதர்களின் மனங்களில் இடம்பிடைப்பதைவிட உயர்ந்த சம்பாத்தியம் வேறு எதுவுமில்லை.
அன்பு, கருணை, மனிதநேயம் என்ற மூன்று தாரக மந்திரங்களை வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டு, உலகிற்கு சேவையின் உயரிய அர்த்தத்தை உணர்த்திய அன்பின் உருவம், சேவைச் செம்மல் “அன்னை தெரசா” அவர்களின் பெயரில், எங்கள் கிரீன் குளோப் அமைப்பின் பல்லாண்டுகால மனிதநேயப் பணிகளுக்காக, இந்தியாவில் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் குரலான SDPI கட்சியின் சார்பில் 01.08.2026 அன்று மதிப்புமிகு தமிழச்சுடர் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் திரு நெல்லை முபாரக், துணைத் தலைவர் திரு உமர் பாரூக் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
விழாவிற்கு உலகளாவிய தொழிலதிபரும், கீழக்கரையைச் சேர்ந்தவருமான மரியாதைக்குரிய திரு அஹமது புஹாரி அவர்கள் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.அதே நிகழ்வில் சக விருதாளரான திரு பிளாக் துலிப் எஹ்யா அவர்கள், மரியாதைக்குரிய பி.எஸ்.ஏ. அப்துர் ரஹ்மான் அவர்களின் பெயரில் வழங்கப்பட்ட “வணிக மணி” விருதால் கௌரவிக்கப்பட்டார்.
கிரீன் குளோப் அமைப்பின் நீண்டகால தன்னலமற்ற மனிதநேயச் சேவைகளைப் பாராட்டி, அன்னை தெரசா விருதை எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் திரு நெல்லை முபாரக் அவர்கள், கிரீன் குளோப் நிறுவனரும் தலைவருமான திருமதி ஜாஸ்மின் அபூபக்கர் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தார். அதனுடன் ரூ.25,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
விழாவின் முத்தாய்ப்பாக, திருமதி ஜாஸ்மின் அபூபக்கர் அவர்கள் தாம் பெற்ற ரூ.25,000 பரிசுத் தொகையை, ஏழை எளிய மக்களுக்கும் அடித்தட்டு சமூக மக்களுக்கும் தொடர்ந்து சேவையாற்றி வரும் எஸ்டிபிஐ கட்சியின் சமூக நலப் பணிகளுக்காக நன்கொடையாக வழங்கினார். அப்போது திரு அஹமது புஹாரி மற்றும் திரு பிளாக் துலிப் எஹ்யா, ஜாஸ்மின் அவர்களின் கணவர் திரு. அபூபக்கர் ஆகியோரும் உடனிருந்தனர்.

தொடர்ந்து ஏற்புரையாற்றிய திருமதி ஜாஸ்மின் அபூபக்கர் அவர்கள், “இந்த விருது எனக்கு மட்டுமல்ல; கடந்த பல ஆண்டுகளாக என்னுடன் இணைந்து மனிதநேயப் பணியாற்றி வரும் கிரீன் குளோப் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் உரித்தான அங்கீகாரமாகும் என்றும் . இந்த விருது எங்களின் பொறுப்புணர்வை மேலும் அதிகரித்துள்ளது. இனி வருங்காலங்களிலும் மனிதநேயம் மற்றும் சமூக சேவையில் இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்” என்று உறுதியளித்தார்.
விழாவின் நிறைவில், எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் நன்றி உரையாற்ற, அனைவரின் பாராட்டுகளுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இந்த உயரிய விருதானது எங்களுக்கு பெருமையையும், அதைவிடப் பெரிய பொறுப்பையும் அளிக்கிறது.  இந்த விருது எங்கள் பயணத்தின் முடிவல்ல; மாறாக, இன்னும் அதிகமான அன்புடன், இன்னும் ஆழமான கருணையுடன், இன்னும் பரந்த மனிதநேயத்துடன் சமூகத்திற்கு சேவை செய்யும் புதிய உறுதிமொழியாகும். மனிதர்களின் இதயங்களில் அன்பின் விதைகளை விதைத்து, நம்பிக்கையின் ஒளியைப் பரப்புவதே எங்கள் வாழ்வின் உண்மையான நோக்கமாக என்றும் தொடரும்.
அன்பு விதைப்போம்… கருணை பகிர்வோம்… மனிதநேயத்தால் மனிதர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருப்போம். எங்களுக்கு உறுதுணையாக இருந்த கிரீன் குளோப் அங்கத்தினர்கள், தன்னார்வளர்கள், நலன் விரும்பிகள், மேலும் இவ்விருத்திற்காக வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!