தமிழகம்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழை வெளுக்கும்.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வானிலை மையம் வார்னிங்

121views

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் 3 மாவட்டங்களுக்கு விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பிச்சு எடுத்தது.

முக்கியமாக மதுரையில் கடந்த 2 நாட்களாக தீவிரமாக மழை பெய்து வந்தது. இதனால் மதுரையில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது.

மதுரை பேருந்து நிலையம் முழுக்க நீர் தேங்கியதும் குறிப்பிடத்தக்கது. தென் மாவட்டங்கள் பலவற்றில் கடந்த சனிக்கிழமையில் இருந்தே விட்டு விட்டு ஆங்காங்கே மழை பெய்தது.

என்னது 5ஜி ஊழலா? எதிர்பார்த்ததைவிட லாபம் குறைவு.. ட்விட்டரில் டிரெண்டாகும் #5G_Scam_Bjp ஹேஷ்டேக்
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் 3 மாவட்டங்களுக்கு விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் அதி தீவிர கனமழை பெய்யும். இந்த 3 மாவட்டங்களில் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் ஏற்கனவே கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல் மதுரை, விருதுநகர், போன்ற மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இங்கு விட்டு விட்டு கனமழை பெய்யும். மாலை நேரத்திற்கு பின் மழை தீவிரமாக பெய்ய வாய்ப்பு உள்ளது.

தூத்துக்குடி, நாமக்கல், சேலம், ஈரோடு, சிவகங்கை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூரில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழ்நாடு கடல் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. இங்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும்.

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை நேரத்திற்கு பின் சென்னையில் சாரல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. காரைக்கால், புதுச்சேரியிலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!