உலகம்உலகம்

ஜெர்மனியில் இன்று 800 விமானங்கள் ரத்து – காரணம் இதுதான்!

94views
விமானிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, ஜெர்மனியின் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் இன்று 800 விமானங்களை ரத்து செய்யவுள்ளது.
ஜெர்மனியில் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் நிறுவனம் இதனை ஏற்றுக் கொள்ளாததால் விமானிகள் சங்கம் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, சலுகைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமானிகள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து, ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் முனிச்சில் இருந்து புறப்படக்கூடிய சுமார் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் சரக்கு விமானங்களும் அடங்கும்.
இதனால், அங்குள்ள 1,30,000 பயணிகள் பாடுக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!