உலகம்உலகம்

சீனாவில் கடுமையான வெப்ப அலை காரணமாக சிவப்பு எச்சரிக்கை 10 நாட்களுக்கு நீட்டிப்பு

54views
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. அங்குள்ள கான்சு, சான்சி, ஹெனான், அன்ஹுய் உள்ளிட்ட மாகாணங்களில் பகல் நேரங்களில் சராசரி வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.
இனி வரும் நாட்களில் சராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சீனா முழுவதற்கும் அதிக வெப்பத்திற்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வெப்ப அலையால் கடும் பஞ்சம் ஏற்படும் என்பதால் நாடு முழுவதும் பஞ்சத்திற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனா முழுவதும் வறட்சியால் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், விவசாயத்திற்கும் ஏற்படும் சேதத்தை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக தீவிபத்துகள் ஏற்படாமல் தடுக்க உள்ளூர் நிர்வாகங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!