இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் ‘எனிமி’ படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இரண்டாவது முறையாக சேர்ந்து நடிக்கின்றனர். ‘எனிமி’ படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.
இதையடுத்து விஷால் தனது அடுத்த புதிய படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார். பெயரிடப்படாத இதற்கு தற்காலிக பெயராக விஷால்32 என்று வைத்துள்ளார்கள். இந்நிலையில் விஷால் நடிக்கும் 33வது திரைப்படம் பற்றிய அப்டேட் வெளிவந்துள்ளது.
இந்த படத்தை சிம்புவை வைத்து AAA படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்க உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது பிரபுதேவா, அமைரா, ஜனனி ஐயர், ரம்யா நம்பீசன் நடிப்பில் ‘பஹீரா’ படத்தை இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தின் பின் தயாரிப்பு பணிகள் எல்லாம் முடிந்து திரையரங்க வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. ஆதிக், அஜித் நடிப்பில் 2019ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து இருந்தார்.
இந்த விஷால் – ஆதிக் படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரிக்கவுள்ளார். வரும் டிசம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.