விளையாட்டு

குறைந்தது ஒருநாள் போட்டிகள் * இந்திய கிரிக்கெட் திட்டத்தில்

57views
வரும் 2027 வரையிலான இந்திய ஆண்கள் அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் குறித்த விபரம் வெளியானது.
இதில் ஒருநாள் போட்டிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வரும் 2023-2027 வரையிலான சர்வதேச போட்டிகள் குறித்த எதிர்கால அட்டவணை திட்டம் வெளியானது.
இதன் படி இந்திய ஆண்கள் அணி அடுத்த 5 ஆண்டில் 38 டெஸ்ட், 42 ஒருநாள், 61 ‘டி-20’ என மொத்தம் 141 சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஒருநாள் போட்டித் தொடர் 3 போட்டிகள் கொண்டதாக தொடர்கிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தொடர் மீண்டும் நடத்தப்படாது.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி தொடர், 2024-25 முதல், 5 டெஸ்ட் (தற்போது 4 டெஸ்ட்) கொண்டதாக மாற்றப்பட உள்ளது. தவிர இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரும் 2024 முதல் 5 போட்டிகளாக மாறுகிறது.
‘டி-20’ போட்டிகளுக்கு உள்ள வரவேற்பு காரணமாக, ஒருநாள் போட்டி எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்திய அணி பல்வேறு ‘டி-20’ தொடர்களில் 5 போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளது. 2023 உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி, 27 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும்.
* சர்வதேச அளவில் ‘டாப்’ 12 அணிகள், 173 டெஸ்ட், 281 ஒருநாள், 323 ‘டி-20’ என மொத்தம் 777 போட்டிகளில் மோதவுள்ளன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!