விளையாட்டு

காமன்வெல்த் கிரிக்கெட்: இந்தியா ‘வெள்ளி’

44views
காமன்வெல்த் விளையாட்டு பெண்களுக்கான ‘டி-20’ பைனலில் ஏமாற்றிய இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெள்ளி வென்றது.
இங்கிலாந்தின் பர்மிங்காமில், 22வது காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. இதில் பெண்களுக்கான ‘டி-20’ கிரிக்கெட் அறிமுகமானது. பைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனே (61), கேப்டன் மேக் லானிங் (36), ஆஷ்லீக் கார்ட்னர் (25) கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் ரேனுகா சிங், ஸ்னே ராணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (6), ஷபாலி வர்மா (11) ஏமாற்றினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (33) நம்பிக்கை தந்தார். பூஜா (1) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 43 பந்தில் 65 ரன் (2 சிக்சர், 7 பவுண்டரி) விளாசினார். தீப்தி சர்மா (13), ஸ்னே ராணா (8), ராதா யாதவ் (1) சோபிக்கவில்லை.
கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டன. ஜெஸ் ஜோனாசன் வீசிய 20வது ஓவரில் மேக்னா சிங் (1), யஸ்திகா பாட்யா (2) அவுட்டாகினர். இந்திய அணி 19.3 ஓவரில் 152 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்டாகி’ தோல்வியடைந்தது. இந்திய அணி வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!