கவிதை

காந்தி பிறந்த நாள் – உறுதியேற்பு

207views
இந்திய நாடு எங்களின் நாடு
ரத்தம் சிந்திய தியாகிகள் நாடு
காந்தி பிறந்த அகிம்சை நாடு
இங்கே கோட்சேக்களுக்கு ஏது நாடு
இந்திய நாடு எங்கள் நாடு
பல மொழிகள் பேசும் மக்கள் நாடு
இந்திய நாடு எங்கள் நாடு
பல மதங்கள் இருந்தும் ஒற்றுமை கூடு
காந்தி பிறந்த இந்நாளில்
மக்கள் நாங்கள் ஒன்றாய் கூடி
ஒற்றுமை கீதம் பாடுகிறோம்
ஒருபிடி மண்ணும் எங்கள் சொத்து
இங்கே சங்கிகளுக்கு ஏது வித்து?
இந்திய நாட்டை பாதுகாக்க
மக்கள் நாங்கள் ஒன்றாய் கூடி
ஒற்றுமை கீதம் பாடுகிறோம்
மனுவை கிழித்துப் போடுகிறோம்
காந்தி பிறந்த இந்நாளில்
இந்திய நாட்டைப் பாதுகாக்க
உறுதியேற்போம்
உறுதியேற்போம்
  • பாரிகபிலன்

 

 

2 Comments

  1. என் எழுத்தை
    ஓர் அழகான பதிவாகத் தந்த naan media விற்கு நன்றி 🙏

  2. சிறப்பான செயல்பாடு…
    எனது வாழ்த்தையும் உரித்தாக்கி மகிழ்கிறேன் 🙏🌾

Leave a Reply to பாரிகபிலன் Cancel reply

Right Click & View Source is disabled.

error: Content is protected !!