சினிமா

கமலின் விக்ரம் பட டிஜிட்டல் உரிமத்தை தட்டித் தூக்கிய பிரபல சேனல்.. பல கோடி லாபம் பார்த்த லோகேஷ்

76views

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் தரமான இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் வித்தியாசமான கெட்டப்பில் திரையரங்குகளை தெறிக்க விடுவதற்காக விக்ரம் திரைப்படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய வைரலானது. கமல்ஹாசனின் கெட்டப்பும் அவர் கையில் அணிந்திருந்த காப்பும் அவரது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கமலின் சத்யா படத்தை நினைவுப்படுத்துவது போல இருந்தது.

இதுபோக இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் ஆகியோர் நடிப்பதால் இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த சமயத்தில் இந்தப் படத்தை குறித்தான முக்கியமான தகவல் கசிந்திருக்கிறது. கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் அனைத்திந்திய டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை ஸ்டார் நெட்வொர்க் வாங்கி இருக்கிறது.

ஆக இனிமேல் விஜய் டிவியில் இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்கலாம் என்பது உறுதியாகி இருக்கிறது. அதுபோக, இந்த படத்தின் OTT ரிலீஸை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நூற்று பன்னிரண்டு கோடி ரூபாய்க்கு இந்த படத்தை வாங்கி இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் படம் இந்த அளவிற்கு விற்பனையாகி இருக்கிறது என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படத்திற்கான பட்ஜெட்டை இந்த படம் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது.

இனி பார்க்க வேண்டியது லாபம் மட்டுமே என்று விக்ரம் படக்குழு செம ஹாப்பி மூடில் இருக்கிறது. கமல்ஹாசனின் மார்க்கெட் வேல்யூ லோகேஷ் கனகராஜ் இயக்கம் மீதான நம்பிக்கை என்று இந்த படத்திற்கு நிறைய ப்ளஸ் பாயிண்டுகள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் என்ற இருபெரும் நடிகர்கள் இந்தப்படத்தில் இருப்பதால் படத்தின் கதை நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும் என்றும் கமலஹாசனின் நடிப்பிற்கு தீனி போடும் அளவிற்கு படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டில் வெளியான பல படங்கள் பெரிய பட்ஜெட் படங்களாக வந்து போதுமான அளவிற்கு கல்லா கட்டாமல் தோற்றுப் போயிருக்கிறது. அப்படி இருக்கையில், கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் இப்போது அதிக வசூல் செய்ய கூடிய ஒரு படமாக 2002 ஆம் ஆண்டில் அமையும் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறது.

மே மாதத்திற்குள் படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு மே மாத இறுதியில் படத்தை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது. தமிழ் சினிமாவில் மற்றுமொரு பிளாக்பஸ்டர்காக திரையரங்குகள் காத்திருக்கின்றன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!