சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி -12

130views
இரண்டு நாட்கள் ஆனது, கவிதா அவளுக்காக பார்த்த வீட்டில் குடியேறினாள்.
லட்சுமியும் அங்கு சென்றிருக்க அப்போதுதான் தன் மகளை பார்க்கிறாள்.
பார்த்ததும் மகளை கட்டியணைத்தாள்.
“எப்படி இருக்க மா ? எவ்வளவு நாளாச்சு உன்ன பார்த்து, இப்படி துறும்பா போயிருக்க” , என்று கேட்க
“நான் என்ன பண்ணுவது, எனக்கு மூன்று குழந்தைகள் அவர் போய் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிறது.”
“என்னது அவர் இல்லையா?”
அப்போதுதான் லட்சுமிக்கு தெரிகிறது தன் மகளுடைய கணவர் இறந்துவிட்டார் என்று,
“ஆமாம், அவருக்கு மஞ்சள் காமாலை இருந்திருக்கிறது அது எங்களுக்கு முற்றிய நிலையில் தான் தெரிந்தது.
அப்போது நாங்கள் மருத்துவம் பார்த்தும் எந்த பயனில்லாமல் போய்விட்டது. சரி விடுமா எதையோ நினைத்து வருத்தப் படாதே”
“இனி உனக்கு உன் குடும்பம் இருக்கு சரியா, வா நம்ம வீட்டுக்கு ” போயிட்டு வரலாமுன்னு தன் பேரக்குழந்தைகளுடன் வீட்டுக்கு போறா,
உள்ளே இருந்து சரவணன் வர தன் மகளின் குழந்தைகளையும் பார்க்கிறார்.
கவிதா மேல் இருந்த கோபம் காணாமல் போய் குழந்தைகள் மீது பாசம் வருகிறது.
“உள்ள வாங்க” என்று குழந்தைகளை கூப்பிட்டு அவரே உணவை பரிமாறுகிறார்.
கவிதாவைப் பார்த்ததும் வாம்மா.
நல்லா இருக்கியா?
நீயும் வந்து சாப்பிடு என்று சாப்பிட வைக்கிறார்.
கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய தேவியும் , அவளது கணவனும் கவிதாவை பார்த்ததும் மகிழ்கிறார்கள்.
வாங்க சித்தி என்று கூப்பிடு சமையல் அறையில் சென்று உணவுகளை எடுத்து பரிமாறுகிறாள்.
சாப்பிட்டு முடித்ததும் அனைவரும் ஒன்றாக பேசிக்
கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாள் இப்படியே கழிகிறது.
அடுத்த நாள் ஆனது,
காலையிலேயே எழுந்த லட்சுமி
வீட்டு வேலைகளை செய்து முடித்துவிட்டு,
யோசித்துக் கொண்டே இருக்கிறாள்.
இனி தன் மகளையும் அவளின் குழந்தைகளையும் விடக்கூடாது, அவர்களுக்கான பாதுகாப்பையும் சேமிப்பையும் செய்து தர வேண்டுமென யோசிக்கிறாள்.
அடுத்த நாள் தன் மகளின் வீட்டுக்கு சென்ற சரவணன் வீட்டுக்கு தேவையான அனைத்து மளிகை சாமான்களையும் வாங்கி தருகிறார்.
கவிதா தன் குழந்தைகளுடன் தினமும் வீட்டுக்கு வருவது வாடிக்கையாகிவிட்டது.
அப்படி வராத நாட்களில் தாய் உணவுகளை சமைத்து எடுத்து வந்து தருவாள் இப்படியே போய்க் கொண்டிருந்தது.
இதே போல் ஒரு நாள் வீட்டிற்கு வந்த கவிதா தன் தாயிடம் கேட்கிறாள்?
தேவிக்கு எத்தனை மாதங்கள் ஆகிறது?
ஏன் அவளை நீ எந்த வேலையும் செய்ய விடாமல் பார்த்துக் கொள்கிறாய்
எல்லா வேலைகளும் நீயே செய்து இந்த வயதில் கஷ்டபடுகிறாய் என்று கேட்க
அவளுக்கு ஐந்து மாதங்கள் தான் ஆகிறது.
அதுதான் எல்லாவற்றையும் நானே பார்த்துக்கொள்கிறேன்,
என்று சொல்ல
ஐந்து மாதங்களில் எல்லா வேலைகளும் செய்யலாம் “நீ அவளை சோம்பேறி ஆக்கி விடாதே “என்று சொல்லிக்கொண்டே இருக்க உள்ளிருந்து வந்த தேவி இதைக்கேட்டு வருத்தம் அடைகிறாள்.
இதேபோல் தினமும் இவர்களுக்குள் பனிப்போர் தொடர்கிறது.
மீண்டும் நாளை சந்திப்போம்.
  • ஷண்முக பூரண்யா. அ

 

1 Comment

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!