126
பள்ளியை விட்டு வீட்டுக்கு சென்றதும், தன் தாயிடம் ரத்தினா காலையில் நடந்தவற்றை கூறுகிறாள்.
தன்னை அப்பா வேறொரு வீட்டிற்கு கூட்டிச் சென்றதாகவும், உனக்கு இங்கு வேறொரு அம்மா இங்கு இருக்கிறாள் என்றும் கூறியவற்றை தன் தாயிடம் தெரிவிக்கிறாள்.
அதற்கு தேவி, “இனி உன் அப்பா அங்கு கூட்டிச்சென்றாள், வரமாட்டேன் என்று சொல்லி விடு. அதற்காக ஏன் அழுகிறாய்? வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு பிடிக்காது, அதற்காக நாம் அழுதோம் என்றால் அது சரி வராது, அதனால் நீ வரமாட்டாய் என்பதை அழுத்தமாக சொல்லி விடு உன் அப்பாவிடம் சரியா…..”
“சரி அம்மா நான் இனிமேல் அழ மாட்டேன் அப்படியே சொல்லி விடுகிறேன்.”
“இப்போது நீ கை கால் அலம்பி விட்டு சாப்பிட வா…..”
என மகளுக்கு உணவு ஊட்டி விட்டு படிக்க வைக்கிறாள்.
வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய செழியனிடம் “எதற்காக காலையில் ரத்தினா வை அங்கே கூட்டி சென்றீர்கள். அவள் அந்த விஷயத்தில் இருந்து மீளவே இல்லை. சின்ன குழந்தை மனதில் எதற்கு இப்படி காயத்தை உண்டு பண்ணுகிறீர்கள்……இந்த ஒரு விஷயம் அவள் மனதில் பதிந்து ஆழம் ஆகிவிடும்.
அந்தக் குழந்தை யோசிக்காதா அப்பா ஏன்? இன்னொரு அம்மா என்று வேறொருவரை சொல்கிறார் …”
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல், “இந்த பேச்சை இதோடு நிறுத்தி விடு. இனி அவளை நான் எங்கும் கூட்டி செல்ல மாட்டேன் போதுமா!…”
அடுத்த நாள் காலை பள்ளிக்கு தன் மகளை அழைத்துச் செல்ல தயாராக இருக்கும்போது,
அவளோ தன் தாத்தாவோடு கிளம்புகிறாள்.
தன் அப்பாவிடம் நான் கிளம்புகிறேன் என்று கூட சொல்லாமல் செல்கிறாள்.
இந்த விஷயம் செழியனுக்கு தன் மகளுக்கு தான் ஏதோ மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டதாக நினைக்கிறான்.
இதைப்போல் கார்குழலி வீட்டுக்கு சென்றதும் கார்குழலி “எதற்காக விருப்பமில்லாத குழந்தையை கூட்டிக் கொண்டு வருகிறீர்கள். அவளுடைய அம்மா அவளுக்கு ஏற்கனவே இதைப்பற்றி கூறி இருப்பார்கள்.
அதனால்தான் அவள் வீட்டுக்குள் வர பயப்படுகிறாள்.”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை நீ பேச்சை நிறுத்து” சொல்லிவிட்டு வெளியே கிளம்புகிறான்.
இவன் சென்றதும், கார்குழலி தாய் “இனிமேல் மெல்ல மெல்ல ரத்தினா வை நம் பக்கம் சேர்த்துக் கொண்டால் மட்டுமே நாம் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும்.” என பேச ஆரம்பிக்கிறாள்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment