Uncategorizedசிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 41

288views
கோபத்துடன் வெளியே வந்த தேவியை பார்த்த லட்சுமி என்ன நடந்தது என்று கேட்க…………
அதற்கு நடந்தவற்றை கூறுகிறாள் தேவி.
உடனே கோபம் அடைந்த லட்சுமி இவர்கள் இருவருக்கும் வாழ்க்கையே கசப்பாக மாறுவதற்கு கார்குழலி தான் காரணம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் கடைக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு, கார்குழலி யின் வீட்டுக்கு சென்று அவள் அம்மாவிடம் சண்டை இடுகிறாள்.
“அன்றே என் மகனை திருமணம் செய்ய உங்களிடம் பெண் கேட்டு வந்தேன். அன்று வேண்டாம் என்று உதறி விட்டு இன்று எப்படி நீங்கள் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தீர்கள்” என்று கேட்டதும்…
“நான் எப்போது உன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தேன்.”
என்று கார்குழலி யின் தாயும் சண்டையிடுகிறார்.
அலுவலகம் சென்று வீடு திரும்பிய கார்குழலி இதைக்கேட்டதும் அதிர்ச்சியில் நிற்கிறாள்.
தன் தாய்க்கே தெரியாத விஷயத்தை செழியன் தாய் கூறி விட்டாரே என்று பயத்துடன் நிற்கிறாள்.
செழியனின் குடும்பத்துக்கு மட்டும் தெரிந்த விஷயம் இப்போது இவர்களின் சண்டையால் ஊருக்கே தெரிந்துவிட்டது.
உள்ளே நுழைந்ததும் வாய் பேசாமல் இருந்த கார்குழலி கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து கேட்க…….
“ஆமாம்!….நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்” என்று கூறுகிறாள்.
இதனைக்கேட்ட தாய் “இனி நீ என்னுடன் இருக்காதே!….வீட்டை விட்டு வெளியே செல் “என்று துரத்திவிட……
உடனே செழியனின் தொலைபேசி அலறுகிறது.
நடந்தவற்றை கார்குழலி கூற செழியன் அதற்கு “நான் உனக்கு உடனே வீடு பார்க்கிறேன். நீ அங்கு சிறிது காலம் இரு கால்கள் கொஞ்சம் சரியானதும் நானே வந்து பார்க்கிறேன். இப்பொழுது எனது நண்பனை அனுப்பி வைக்கிறேன். அவன் வீட்டு அருகில் ஒரு பகுதி காலியாக உள்ளது அதில் தற்சமயம் தங்கிக்கொள்.”
“சரி நான் அப்படியே செய்கிறேன்” என்று வீட்டை விட்டு வெளியேறி
அவன் சொல்லும் இடத்தில் குடியேற அக்கம்பக்கத்தினர் அனைவருக்கும் இவள் செழியனின் இரண்டாவது மனைவி என்று தெரியவருகிறது.
சிறிது நாட்கள் கழித்து செழியனின் கால் சரியாக நடக்க முடியும் என்ற நிலைமைக்கு வந்த பின் அலுவலகம் செல்கிறேன் என்று கார்குழல் யின் வீட்டுக்கு போக வர ஆரம்பித்தான்.
நாளடைவில் இந்த விஷயம் கார்குழலி தெரியவர அவளும் தனக்கு விதித்தது இதுதான் என்று சகித்துக்கொண்டு வாழ ஆரம்பித்தாள்.
அவன் என்னதான் தேவியின் மீது பாசமாக பேசினாலும் அது அவளுக்கு பற்றுதல் இல்லாமல் போய்விட்டது.
செழியனின் மகள் ரத்னாவும் வளர ஆரம்பித்தாள்.
கார்குழலி க்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து அவள் அலுவலகப் பணியில் இடைக்கால ஓய்வு பெற்று குழந்தைக்காக வீட்டில் இருந்தாள்.
கார்குழலி க்கு குழந்தை பிறந்த விஷயம் தெரிந்து கார்குழலி யின் வீட்டார் அவளிடம் பேச ஆரம்பிக்கிறார்கள்.
குழந்தையை கார்குழலி யின் தாய் பார்த்துக்கொள்ள கார்குழலி வழக்கம்போல வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறாள்.
செழியன் வாரத்தில் ஒருநாள் மட்டும் கார்குழலி யின் வீட்டிற்கு வருவான்.
இதைக்கண்ட கார்குழலி யின் தாய்
அவள் மனதை பேசிப்பேசி மாற்றுகிறாள்.
அவருக்கும் இங்கு குழந்தை உள்ளது.
அவன் இங்கு ஒரு நாள். அங்கு ஒரு நாள் இருக்க வேண்டியதுதானே, அது என்ன வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் வருவது.”
அவள் பேச பேச……
கார்குழலி யின் மனது நஞ்சாய் மாறுகிறது.
மீண்டும் நாளை சந்திப்போம்
  • ஷண்முக பூரண்யா. அ

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!