118
எப்பொழுதும் போல தேவி செழியனின் அலுவலக பையை திறக்க அதில் கார்குழலி யின் கைகுட்டை இருக்க
என்னவென்று புரியாமல் திகைத்தாள்.
இதை தன் கணவனிடம் கேட்கலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்தாள்.
மறுபடி இரண்டு நாள் கழித்து அவனது பையை திறக்க அதில் மீண்டும் ஒரு புடவை இருந்தது.
இதை தேவி பார்த்துக்கொண்டிருக்கும்போதே…செழியன் வந்துவிடுகிறான்.
உடனே அவன் இது உனக்காக தான் வாங்கி வந்தேன் கொடுக்க மறந்துவிட்டேன் என்று சமாளிக்கிறான்.
கணவன் தனக்காக தான் வாங்கி வந்தான் என்று நினைத்து இவளும் மகிழ்ச்சி அடைகிறாள்.
சரவணன் உடல்நிலை நன்றாக தேறி கடைக்கும் செல்ல ஆரம்பிக்கிறார்.
கவிதாவும் அவருக்குத் துணையாக கடையை பார்த்துக் கொள்கிறாள்.
எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக அலுவலகத்தில் இருந்து கிளம்பி வந்துக் கொண்டிருந்த செழியனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான்.
இந்த செய்தி செழியன் வீட்டுக்கு தெரியவர தேவியும், லட்சுமியும் சரவணனிடம் சொல்லாமல் பதறிக் கொண்டு செல்கிறார்கள்.
அங்கு போய் பார்த்தால் இவர்களுக்கு முன்னால் கார்குழலி வந்து மருத்துவரிடம் தான் மனைவி என்றும் , அவனுக்கு மருத்துவம் பார்க்கச் சொல்லி அந்தப் படிவத்தில் கையொப்பம் இடுகிறாள்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த தேவியும், லட்சுமியும் அதிர்ச்சியில் நிற்கிறார்கள்.
இதை பார்த்துக் கொண்டிருந்த தேவி கோபத்தில் கார்குழலி பிடித்து கன்னத்தில் அறைக்கிறாள்.
“எதற்காக நீ அவரின் மனைவி என்று சொன்னாய்??? நான் தான் வருகிறேன். அதற்குள் நீ எதற்கு இப்படி செய்தாய்??? எங்களுக்கு இல்லாத அக்கறை அப்படி என்ன உனக்கு???”
எதற்கும் பதில் பேசாமல் மௌனமாக இருக்கிறாள் கார்குழலி.
பார்ப்போம் கார்குழலி யின் பதில் என்னவென்று.
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment