73
வீட்டிற்கு சென்றதும் மன வருத்தத்தில் இருந்த தேவிக்கு தாய் சாந்தி ஆறுதல் கூறினாள்.
குடும்பம் என்றால் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் அதையெல்லாம் அனுசரித்துப் போக வேண்டும்.
“கவலைப்படாதே! தேவி இதுவும் சரியாகும்.”
“எப்படிமா இது சரியாகும். நீயே சொல்???”
வீட்டில் ஒருவராவது எனக்கு ஆதரவாக பேசினால் பரவாயில்லை. ஆனால் என் கணவரே எனக்கு எதிராக பேசுகிறார் . எப்படி சரியாகும் என்று நான் நினைக்க,
“முதலில் ஒன்றை புரிந்து கொள் எந்த கணவனும் புரிந்துகொள்ள சற்றுக் காலம் எடுக்கும் . அதேபோல உனக்கும் தொடக்கத்தில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டு சரியாகிவிடும். அந்தப் பிரச்சினையை பிடித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக வாழ்க்கை கசந்து விடும். அதனால் உன் கணவனின் நல்ல விஷயங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள். அது நாளடைவில் உன்னை மாற்றி விடும்.”
“என்னவோ சொல்கிறாய். அதன்படி நான் மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன் .”
“ஆனால் அது உடனடியாக நடக்காது. கொஞ்சம் நாட்களாகும். இப்போது கொஞ்சம் ஓய்வு தேவை எனக்கு அதனால் நான் என் அறைக்கு செல்கிறேன்.”
“சரி போய் ஓய்வு எடு அதுவே உனக்கு மருந்தாக அமையும். நானும் உனக்கு ஏதாவது உணவு சமைத்து எடுத்து வருகிறேன்” என சொல்லி சமைக்க செல்கிறாள்.
தேவி இல்லாத இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று லக்ஷ்மி நினைக்கிறாள்.
அதனால் தேவியின் மீது நிறைய புகார்களை சொல்லி தேவியைப் பற்றி செழியன் மனதில் தவறான எண்ணத்தை விதைக்க வேண்டும் என எண்ணுகிறாள்.
செழியன் இல்லாத நேரங்களில் அவனது அறைக்கு சென்று என்ன செய்யலாம் என்று ஆராயத் தொடங்கினாள்.
யோசனை வந்ததும் அவனுடைய கல்யாண போர்வையை அவளே இரண்டாக கிழித்து மறுபடி மடித்து வைத்து விட்டாள்.
செழியன் வந்ததும் அவனது அறையை சுத்தம் செய்ய வந்ததாக கூறி விட்டு, இப்போதுதான் இந்த போர்வையை பார்க்கிறேன். அவளிடம் ஏற்கனவே சொல்லியுள்ளேன்.
துணிகளை ஊற வைத்து துவைக்காதே என்று அவள் அதை கேட்கவே இல்லை இப்போது வந்து பார்த்தால் உனது கல்யாண போர்வை கிழிந்து இருக்கிறது. அதையும் அவள் நம்மிடம் சொல்லாமல் மறைத்து விட்டாள்.
இதைக் கேட்டதும் தேவியின் மீது அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டது.
தேவியை ஒரு பொறுப்பற்றவள். போல சித்தரித்துக் காட்டுகிறாள்.
தேவியின் மனது கொஞ்சம் கொஞ்சமாக நல்ல விதமாக மாறுகிறது.
அதேபோல் செழியனின் மனதில் தேவியைப் பற்றி நஞ்சு விதைத்துக்கொண்டே வருகிறாள் லட்சுமி.
மீண்டும் சந்திப்போம்.
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment