விளையாட்டு

‘ஒருநாள், டி20 தொடர்’…இந்திய அணி அறிவிப்பு: தினேஷ் கார்த்திக், மாலிக் நீக்கம்..விபரம் இதோ!

414views
இந்தியா, இங்கிலாந்து இடையில் கடந்த ஆண்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் நான்கு போட்டிகள் நடந்து முடிந்து இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில் கடைசிப் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
அரியணை ஏறும் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வத்துக்கு கல்தா!
ஒத்திவைக்கப்பட்ட அந்த கடைசிப் போட்டி இன்று துவங்கவுள்ளது. இதில் இந்தியா டிரா செய்தாலே தொடரைக் கைப்பற்றிவிடும். அதற்கு சாத்தியம் அதிகம் இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இந்தியா, இங்கிலாந்து இடையில் ஜூலை 7ஆம் தேதிமுதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. டி20 தொடர் ஜூலை 7,9,10 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் தொடர் 12, 14 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.
இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நிறைய மாற்றங்களும் இருக்கிறது. ஆம், முதல் டி20 போட்டியில், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்ற இந்திய இளம் அணி களமிறங்க உள்ளது. அடுத்த இரண்டு டி20 போட்டிகளிலும், ஒருநாள் தொடரிலும் சீனியர் அணி களமிறங்க உள்ளது. இதில் ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக், உம்ரான் மாலிக் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
இந்திய டி20 அணிகள்:
முதல் டி20: ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஜ்வேந்திர சஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
2,3ஆவது டி20:ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஜ்வேந்திர சஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஜஸ்பரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்.
ஒருநாள் அணி:
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்தூல் தாகூர், யுஜ்வேந்திர சஹல், அக்சர் படேல், ஜஸ்பரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!