உலகம்உலகம்செய்திகள்

உடல் இளைத்துப்போன வடகொரிய அதிபர் !

72views

அதிரடி நடவடிக்கைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர் வடகொரிய அதிபர் கிம். அவ்வப்போது திடீரென மாதக்கணக்கில் காணாமல் போவார். பிறகு ஊடகங்கள் முன்பு தோன்றுவார். உலகமே கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கையில் அணு ஆயுத சோதனைகள் நடத்திக் கொண்டிருப்பார். இதுபோன்ற கிம்மின் நடவடிக்கைகளால் வடகொரிய மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பார்கள் என்று சர்வதேச நாடுகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், கிம்மின் எடை குறைவுக்கு வட கொரியர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள் என்று அந்நாட்டு ஸ்டேட் டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

கிம்மின் எடை குறைந்த புதிய தோற்றத்தைப் பார்த்த பிறகு வடகொரிய மக்களின் இதயம் வலிக்கிறது. ஒவ்வொருவரின் கண்களிலும் தானாகவே கண்ணீர் பெருகுகிறது’ என்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வட கொரியாவில் பொருளாதாரம் மோசமடைந்துள்ளது. அதனை சீர்திருத்தும் நடவடிக்கைகளில் ஓய்வில்லாமல் உழைப்பதாலேயே எடை குறைந்துவிட்டது என்றும் பல வடகொரியர்கள் கண்ணீர் வடிக்கிறார்களாம். சில தொலைக்காட்சிகள் இதற்கு முன்பு கிம் நடந்து வரும் வீடியோவையும், தற்போதைய வீடியோவையும் ஒப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளது. சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் கிம் வாட்ச் கட்டியிருப்பதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் நுட்பமாகக் காட்டியுள்ளது. ‘இந்த எடை குறைப்பு இத்தனை தீவிரமாக விவாதிக்கும் அளவுக்கு பெரிய விஷயம் ஒன்றுமில்லை. இத்தனைக்கும் 170 செமீ உயரமுள்ள கிம் 140 கிலோ எடை கொண்டவர். இதில் 10 முதல் 20 கிலோ வரையிலும் உடல் எடை குறைந்திருக்கலாம். இதற்குத்தான் இத்தனை அலப்பறை.

‘தனது எடையை பராமரிப்பதற்காக டயட்டை கிம் பின்பற்ற தொடங்கியிருக்கலாம். 10 கிலோ எடை குறைப்பு என்பது இத்தனை தீவிரமாக விவாதிக்குமளவு பெரிய விஷயமல்ல. வட கொரியாவில் வேறு எத்தனையோ பிரச்னைகள் உள்ளது’ என்று சியோலில் உள்ள அரசியல் பார்வையாளர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!