உலகம்

உக்ரேனில் ரஷ்ய உத்தி தோல்வி; லிவிவ் நகரில் மாஸ்கோ தாக்குதல் தீவிரம்

50views

உக்­ரே­னில் ரஷ்யா தொடுத்து இருக்­கும் போர் உத்தி தோல்வி கண்­டு­விட்­டது என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கூறி­னார்.

ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்டின் பத­வி­யில் நீடிக்க இய­லாது என்­றும் அமெ­ரிக்க அதி­பர் போலந்­தில் தெரி­வித்­தார். முன்­ன­தாக அவர் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டார். அதில் ரஷ்ய அதி­பரை ‘கசாப்­புக்­கடைக்­கா­ரர்’ என்று வர்­ணித்­தார். ஆனால் உட­ன­டி­யாக இதை ரஷ்யா மறுத்து கண்­டித்­தது.

தங்­கள் அதி­பர் யார் என்­பதை முடிவு செய்­வது ரஷ்­யர்­களைப் பொறுத்­தது என்­றும் மாஸ்கோ தெரி­வித்­தது.

இவ்­வே­ளை­யில், உக்­ரேன் மீது ரஷ்யப் படை­யெ­டுப்பு தொடங்கி ஒரு மாதம் ஆன நிலை­யில் மாஸ்கோ பல நகர்­க­ளி­லும் தொடர்ந்து தாக்குதலைத் தீவி­ரப்­படுத்­தி­ உள்ளது.

உக்­ரே­னின் மேற்கு லிவிவ் நகரில் ராணுவ இலக்­கு­களைக் குறி­வைத்து துல்­லி­ய­மா­கப் பாயும் குருஸ் ஏவு­க­ணை­களை ரஷ்யா பாய்ச்­சி­ய­தாக ரஷ்ய தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

லிவிவ் நக­ருக்கு அருகே உக்­ரே­னிய படை­கள் பயன்­ப­டுத்­திய எரி­பொ­ருள் கிடங்கு ஒன்றையும் ராணுவ ஆயு­தங்­க­ளைச் சரி­செய்­யும் ஆலை ஒன்­றின் மீதும் குருஸ் ஏவு­க­ணையை பாய்ச்சி அழித்­த­தா­க­வும் ரஷ்யா தெரி­வித்­தது.

உக்­ரேன் மீது சிறப்பு ராணுவ நட­வ­டிக்­கையை ரஷ்யா எடுத்து இருக்­கிறது. இதன் ஒரு பகு­தி­யாக அந்த நாட்­டின் மீது ரஷ்ய ஆயு­தப் படை­கள் தொடர்ந்து தாக்­கு­தலை நடத்தி வரு­வ­தாக ரஷ்யா கூறியது.

லிவிவ் நக­ரில் நடத்­தப்­பட்ட ஏவு­கணைத் தாக்­கு­தலை காட்­டும் காணொ­ளி­க­ளை­யும் ரஷ்ய அமைச்சு வெளி­யிட்­டது.

இத­னி­டையே, லிவிவ் நகர் தாக்கு­த­லில் மக்­கள் காய­ம­டைந்து­விட்­ட­தாக அந்த நகர அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். லிவிவ் நக­ரம் போலந்து உக்­ரேன் எல்­லை­யில் 60 கி.மீ. தொலை­வில் உக்­ரே­னில் இருக்­கிறது.

ரஷ்யா மாறி மாறி உக்­ரேனின் எல்­லை­யில் படைகளைக் குவிக்­கிறது என்று டினே­சென்கோ என்ற அதி­காரி கூறி­னார். உக்­ரே­னில் முன்­னேற ரஷ்யா புதிய முயற்சிகளை முடுக்­கி­வி­டும் வாய்ப்பு இருப்­ப­தாகவும் அவர் குறிப்­பிட்­டார். பல ஆளில்லா வானூர்­தி­களை ரஷ்ய படை­கள் அழித்­து­விட்­ட­தாக உக்ரேனிய அதி­காரி­கள் கூறி­னர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!