இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்த வழக்கை தள்ளி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழ் சினிமா உலகில் தனக்கென நீங்கா இடத்தை பிடித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.
1978-1980 ஆம் வருடங்களில் வெளியான 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு,3 கன்னடம், 2 மலையாளம் ஆக மொத்தம் 30 படங்களில் இசை பணிகளை பட தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றதால் இந்த திரைப்படங்களின் இசையை இளையராஜா பயன்படுத்துவதற்கு தடை கோரி இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்த 30 படங்களின் இசை இந்தியன் ரெக்கார்டு கம்பெனிக்கு சொந்தமானவை என கூறி அவற்றை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதித்து 2020 ஆம் வருடம் உத்தரவிட்டிருந்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டில் அவர் கூறியுள்ளதாவது, பட தயாரிப்பாளர்கள் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியன் ரெக்கார்டு உற்பத்திக்கு சாதகமான உத்தரவை பிறப்பிக்க இயலாது. மேலும் தயாரிப்பாளர்களுக்கு படத்தில் காப்புரிமை மட்டுமே உள்ளதாகவும் இசை பணிகளுக்கு அவர்கள் உரிமையாளர்கள் இல்லை எனவும் கூறியிருந்தார். இது வர்த்தகம் சம்பந்தப்பட்டது என்பதால் தனி நீதிபதியின் அதிகாரத்திற்கு மீறியது என்பதால் தனி நீதிபதியின் உத்தரவை தடை விதிக்கக் கோரியும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இளையராஜா கூறியிருந்தார்.
இந்த வழக்கில் இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 1980 ஆம் வருடம் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் காலாவதியான பிறகும் தனது பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும் இதற்குரிய காப்புரிமை பெறவில்லை எனவும் கூறியிருந்தார். மேலும் 1996 டிஜிட்டல் உரிமை பற்றி பேசப்பட்டு 2012ஆம் வருடம் புது சட்ட திருத்தங்கள் வந்தது எனவும் தனி நீதிபதி டிஜிட்டல் உரிமை குறித்த சட்ட திருத்தத்தை கருத்தில் கொள்ளவில்லை. ஆகையால் தனி நீதிபதியின் உத்தரவை தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் பேசினார். இதற்குப் பிறகு நீதிபதி மனுதாரர் தரப்பு வாதங்களுக்குப் பதில் அளிக்க கோரி இந்தியன் ரெக்கார்டு கம்பெனிக்கு 4 வாரங்கள் கொடுத்து விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.