உலகம்உலகம்

இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு

87views

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றத்தை அடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தன பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது.

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன இன்று பிரதமராக பதவியேற்பார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுக்கொண்டார். தினேஷ் குணவர்தனவுக்கு, அதிபர் ரணில் விக்ரமசிங்க பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனிடையே, இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தது.

இதனைத்தொடர்ந்து அந்நாட்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம், வன்முறை என இலங்கை கலவரமாக பூமியாக மாறியது. இதன்பின், இலங்கை பிரதமர், அதிபர் ஆகியோர் பதவி விலகினர். புதிய அதிபராக ரணில் நேற்று பதவியேற்றார். இருப்பினும், இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்க தொடங்கியுள்ள நிலையில், ராஜபக்ச கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தன புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!