உலகம்உலகம்

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா

42views

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றுக்கொண்டதையடுத்து இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல் குழப்பங்களும் நீடித்து வருகின்றன.

மக்களின் எதிர்ப்பை அடுத்து, இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிற்கு தப்பியோடினார். மேலும், அவர் பதவி விலகியதை அடுத்து, அங்கிருந்தவாறே பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் இடைக்கால அதிபராக நியமித்தாா்.

ஏற்கெனவே இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க நாட்டின் இடைக்கால அதிபராக நேற்று பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூா்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

அதன்பின்னர் பேசிய அவர், அதிபரின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் 19-ஆவது சட்டத்திருத்தம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தாா்.

ரணில் பதவியேற்றதையடுத்து இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் அனைத்து எம்.பி.க்களும் கலந்துகொள்ள வேண்டுமென நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்தன வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய வருகிற 20 ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!