உலகம்உலகம்

இலங்கை அதிபர் ரணிலுக்கு இமாலய சவால்கள், பொறுப்புகள்

66views

இலங்கை எத்­த­னையோ பிரச்­சி­னை­க­ளைச் சமாளித்து வந்திருக்­கிறது. ஆனால் இப்­போ­தைய பொரு­ளி­யல் நிலை­மை­யைப்போல் படு­மோ­ச­மான ஒரு பிரச்சினையை எதிர்­நோக்­க­வேண்­டிய நிலை வரும் என்று அந்த நாடு கன­வில்கூட நினைத்துப்­ பார்த்து இருக்­காது.

மக்­க­ளுக்குச் சாப்­பி­ட­க்கூ­ட­வ­ழி­யில்லை; மின்­சாரம் இல்லை. மக்­கள் விழிபிதுங்­கு­கி­றார்­கள். இவ்வ­ளவுக்­கும் கார­ணம் கடந்த 20 ஆண்­டு­களில் நாட்டை ஆண்டு வந்­துள்ள ராஜ­பக்சே குடும்­பத்­தி­னர் அரங்­கேற்­றிய செய­ல்கள்­தான் என்று மக்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் கரு­து­கி­றார்­கள்.

ராஜ­பக்சே குடும்­பத்­தின் அர­சி­யல் செல்­வாக்கை மங்­கச் செய்­தா­ல்தான் நாடு தப்­பிக்­கும் என்று முடிவு செய்து, அர­சி­யல் ரீதி­யில் அது சாத்­தியமில்­லா­த­தால், மக்­கள் வீதி­களில் இறங்கி போராடி அதில் வெற்­றி­யும் பெற்று இருக்­கி­றார்­கள்.

ராஜ­பக்­சேக்­கள் இப்­போது அதி­கா­ரத்­தில் இல்லை. அர­ச­மைப்­புச் சட்­டத்­தின்­படி அசைக்க முடி­யாத அள­வுக்கு அதிக அதி­கா­ரங்களு­டன் ஆட்சி நடத்­திய கோத்­த­பாய ராஜ­பக்சே, தப்­பித்­தோம் பிழைத்­தோம் என்று நாட்­டை­விட்டே ஓட­வேண்­டிய நிலை ஏற்­பட்­டு­விட்­டது.

அவ­ருக்­குப் பதி­லாக இப்­போது ரணில் விக்­ர­ம­சிங்க அதி­ப­ராக பதவி ஏற்­றுக்­கொண்டு இருக்­கிறார். அதி­ப­ராக இருந்த கோத்­த­பா­ய­வின் பத­விக் காலம் 2024ல் முடி­யும்.

அது­வ­ரை­தான் ரணில் அதி­ப­ராக இருப்­பார். மிக அதிக அர­சி­யல் அனு­ப­வம் வாய்ந்த இலங்கை தலை­வர்­களில், 73 வய­தா­கும் ரணிலும் ஒரு­வர்.

ஆறு முறை பிர­த­ம­ராக பதவி வகித்­த­வர்; நாடாளுமன்­றத்­தில் 45 ஆண்­டு­க­ளைச் செல­விட்டு இருப்­ப­வர்; தாராள பொரு­ளி­யல் சந்தை ஆத­ரவாளர்; லங்கை பொரு­ளி­யல் முன்பு பல சவால்­களைச் சந்­தித்த போதெல்­லாம் அவற்றை திறம்­பட சமாளிக்க உத­வி­யாக இருந்­த­வர்; வெளி­நாட்டு உற­வைப் பார்க்கை­யில் இலங்கைக்கு முக்­கி­ய­மான இந்­தியா, அமெ­ரிக்கா, சீனா, ஜப்­பான் ஆகிய நாடு­க­ளு­டன் நல்லுற­வைக் கட்­டிக்காத்­த­வர்.

ஆனால், வெளி­நா­டு­களில் இருக்­கும் செல்­வாக்கு அள­வுக்கு இலங்கை மக்­க­ளி­டம் அவருக்கு அரசி­யல் ஆத­ரவு இல்லை என்பதுதான் அர­சி­யலில் அவ­ருக்குப் பாதகமாக இருந்து வரு­கிறது.

கடந்த 2020ஆம் ஆண்­டில் நடந்த பொதுத் தேர்­த­லில்­ அவ­ரு­டைய ஐக்­கிய தேசிய கட்சி ஓர் இடத்­தில்­கூட வெற்­றி­பெ­ற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அந்­தக் கட்­சி­யின் ஒரே ஒரு நிய­மன உறுப்­பி­ன­ரா­கவே திரு ரணில் நாடாளுமன்­றத்­திற்குள் சென்­றார் என்­பது குறிப்பிடத்தக்கது.

அதோடு மட்­டு­மல்ல, திரு ரணில் ராஜ­பச்­சேக் களு­டன் அணுக்க உற­வைக் கொண்டு இருப்­ப­வர். அத­னால் ராஜ­பக்சே ஆட்சி­யின்­போது பிர­த­மர் பதவியை ஏற்­றுக்­கொண்டு அதன்மூலம் ரணில் அர­சி­யல் ரீதி­யில் கெட்­ட பெய­ரைச் சம்­பா­தித்­துக்­கொண்­ட­வர் என்று சொல்­லப்­ப­டு­கிறது.

இத­னால்­தான் ரணில் மீதும் ஆர்ப்­பாட்­டக்­காரர்­கள் குறிவைக்­கி­றார்­கள். அவ­ரின் அலு­வ­ல­கங்­களை­யும் சொந்த வீட்­டை­யும்­கூட கொளுத்­தி­விட்­டார்­கள். ரணில் விக்­ர­ம­சிங்க நிர்­வா­கத்­தின்கீழ் ஒன்­றும் நடந்­து­வி­டப்­போ­வ­தில்லை என்று நம்­பும் ஆர்ப்­பாட்டக்­கா­ரர்­கள் அவ­ரை­யும் அர­சி­ய­லில் இருந்து அகற்ற வேண்­டும் என்­கி­றார்­கள். கவ­னிப்­பா­ளர்­கள் சிலர் புதி­தாக தேர்­தல் நடக்க வேண்­டும் என்­று­கூட கோரு­கி­றார்­கள்.

ஆனால் உண­வின்றி, எரி­பொ­ருள் இன்றி, பொருளி­யல் சீர்­கெட்டு, நாடு ஏறக்­கு­றைய நொடித்துப் போகும் அள­வுக்கு உள்­ளது என்­ப­தைப் புரிந்து கொண்டு பொது­மக்­கள், குறிப்­பாக ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் பல­வற்­றை­யும் சீர்­தூக்­கிப் பார்க்க வேண்டி யது அவ­சர அவ­சி­ய­மான ஒன்­றா­க இருப்பதால் இப்­போ­தைக்­குத் தேர்­தல் ஒத்­து­வ­ருமா என்­பது கேள்­விக்­கு­றி­யாகத்தான் தெரிகிறது.

முத­லில் நாட்­டின் பொரு­ளி­யல் நல்ல நிலைக்குத் திரும்­ப­வேண்­டும். அதன் பிற­கு­ தேர்­தல் என்பது நடை­முறை சாத்­தி­ய­மா­னதாக, ஒத்துவரக்­கூ­டி­ய­தாக இருக்­கும். பழுத்த அனு­பவ­சா­லி­யான ரணி­லுக்கு மக்­கள் ஒரு வாய்ப்பு தர­வேண்­டும்.

அதி­ப­ராகி இருக்­கும் ரணில் ஆயி­ர­மா­யி­ரம் சவால்­களை எதிர்­நோக்­கு­கி­றார். அவர், தனது அர­சி­யல் அனு­பவங்­களை எல்­லாம் ஒன்று திரட்டி ஆற்­றல் மிகுந்த, நம்­பத்­த­குந்த அர­சாங்­கத்தை முத­லில் அமைக்க வேண்­டும்.

அத்­த­கைய அர­சாங்­கம் இலங்கைச் சமூ­கத்­தின் வெவ்­வே­றான அனைத்துப் பிரி­வு­க­ளை­யம் பிர­தி­நிதிக்க வேண்­டும். ராஜ­பக்­சேக்­கள் கட்­சி­யினரை மட்­டும் அதி­கம் கொண்ட அரசு அமைத்து அதனால் மேலும் பிரச்­சினை ஏற்­ப­டு­வதை ரணில் தவிர்த்­து­விட வேண்­டும். புதிய அர­சில் எதிர்த்­தரப்­புக்­கும் இடம் இருக்­க­வேண்­டும்.

அனைத்­து­லக பண நிதி­ய­மும் கடன் கொடுக்கும் இதர தனிப்­பட்ட தரப்­பி­ன­ரும் இலங்­கைக்கு ஆத­ர­வாக உத­விக்­க­ரம் நீட்டி, உடன்­பா­டு­க­ளைச் செய்து­கொண்டு, அதன்வழி பொரு­ளி­யல் மீட்சி செயல்­திட்­டம் வெற்­றி­க­ர­மான முறை­யில் செயல்­பட வேண்டு­மா­னால் அத்­த­கைய ஓர் அரசு அடிப்­படை தேவை.

அத்­த­கைய உடன்­பா­டு­கள் இடம்­பெற்றால்தான் இலங்கைப் பொரு­ளி­யல் சீர­டை­யும்; தலை நிமி­ரும்; சமூக நிலைப்­பா­டும் ஏற்­படும் என்­பதை சம்­பந்­தப்­பட்ட அனைத்­துத் தரப்­பி­ன­ரும் ஏற்க வேண்­டும்.

அப்­ப­டிப்­பட்ட ஆற்­றல்மிகுந்த, மக்­களின் நம்­பிக்கைமிக்க ஓர் அரசு அமை­வதே இலங்­கைக்கும் இலங்கை மக்­க­ளுக்­கும் இப்­போ­தைக்கு மிக முக்கியத் தேவை­யாக இருக்­கிறது. இதுவே திரு ரணிலும் இலங்கையும் எதிர்­நோக்­கும் சவால்­களில் இமா­லய சவா­லாக இருக்­கிறது.

இதில் பெரும் பொறுப்பு புதிய அதி­பர் ரணிலுக்கு அதி­கம் இருக்­கிறது.

திரு ரணில், நாடா­ளு­மன்­றத்­தின் ஆத­ரவு மட்டும்­தான் இப்­போ­தைக்­குத் தனக்கு இருக்­கிறது, மக்களின் அர­சி­யல் ஆத­ரவு தனக்கு இல்லை என்­பதை உணர்ந்து, மக்­க­ளின் அத­ரவையும் நம்­பிக்கை யையும் மீட்­கும் வகை­யில் நடந்­து­கொள்ள வேண்டும்.

இப்போது தனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி 2024க்குள் நாடு தலை நிமிர அவர் வழிவகை செய்யவேண்டும்.

இப்­ப­டிப்­பட்ட ஓர் அணு­கு­மு­றை­தான் ரணில் மீது மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­பட வழிவகுக்­கும். அந்த வழி, 2024க்குப் பிற­கும் அவரே அதி­ப­ராக இருந்து தொடர்ந்து நாட்டை வழிநடத்த வழி­கோலும் என்று நம்ப இடம் உண்டு.

அதை­விட முக்­கி­ய­மாக, செம்­மை­யான ஆற்­றல் மிக்க, நம்­பிக்கைமிக்க அர­சாங்­கத்தை அமைக்க வேண்­டிய மிக முக்­கிய சவாலை எதிர்­நோக்­கும் புதிய அதி­ப­ருக்கு ஒரு வாய்ப்பு தர­வேண்­டிய பொறுப்பு தங்­க­ளுக்கு இருக்­கிறது என்­பதைப் பொது மக்­கள் உண­ர­வேண்­டும்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!