உலகம்உலகம்

இலங்கைக்கு கடன் கிடையாது; உலக வங்கி திட்டவட்டம்

57views

இலங்­கைக்­குப் புதி­தா­கக் கடன் உதவி செய்­யும் திட்­டம் இல்லை என்று உலக வங்கி திட்­ட­வட்­ட­மா­கத் தெரிவித்துள்ளது. வர­லாறு காணாத பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்டு முடங்­கிக் கிடக்­கும் இலங்கை, நிதி உத­விக்­காக உலக வங்­கி­யி­டம் கை ஏந்­தி­யுள்­ளது. இந்­நி­லை­யில், முறை­யான, போது­மான பேரி­யல் பொரு­ளி­யல் கட்­ட­மைப்பை இலங்கை உரு­வாக்­கும் வரை அதற்கு கடன் கொடுக்­கப் போவ­தில்லை என்று உலக வங்கி தெரி­வித்­தது.

பொரு­ளி­யல் நிலைத்­தன்­மை­யில் கவ­னம் செலுத்­தும் சீர்­தி­ருத்­தங்­களை இலங்கை நடை­மு­றைப்­ ப­டுத்த வேண்­டும் என்­றும் தற்­போது நில­வும் பொரு­ளி­யல் நெருக்­க­டிக்­கான முக்­கிய கார­ணத்தை அது கண்­ட­றிய வேண்­டும் என்­றும் அது கூறி­யது. மிக மோச­மான பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் உணவு, எரி­ பொ­ருள், மருந்து பற்­றாக்­கு­றை­யால் இலங்கை மக்­கள் கடும் அவ­திக்கு ஆளாகி உள்­ள­னர்.

“இலங்­கை­யின் அவ­ல­நிலை, பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் அந்­நாட்டு மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள சொல்­லொண்­ணாத் துயர் ஆகி­யவை குறித்து உலக வங்­கிக் குழு­மம் அக்­கறை கொள்­கிறது,” என்று உலக வங்கி நேற்று அறிக்கை வெளி­யிட்­டது. இலங்­கைக்கு முன்பு வழங்­கப்­பட்ட கடன்­திட்­டங்­க­ளின் வாயி­லாக எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய குடும்­பங்­கள் எதிர்­கொள்­ளும் மருந்து, சமை­யல் எரி­வாயு, உரம், சிறு­வர்­க­ளுக்­கான உணவு, ரொக்­கப் பற்­றாக்­கு­றை­யைக் குறைக்க உலக வங்கி உதவி வரு­கிறது. நிதி­யு­தவி நியா­ய­மான வகை­யில் விநி­யோ­கிக்­கப்­ப­டு­வதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அமைப்­பு­களுடன் இணைந்து செயல்படு­வ­தாக அது கூறி­யது.

ஏற்­கெ­னவே நடப்­பில் உள்ள 17 திட்­டங்­களை உலக வங்கி மறு­சீ­ர­மைக்­கும் என்று இலங்­கை­யின் முன்­னாள் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே கடந்த மாதம் தெரி­வித்­தி­ருந்­தார். கூடு­தல் கடன் பெறு­வது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டு­வ­தா­க­வும் இலங்­கைக்­குக் கூடு­தல் உதவி கிடைக்­கும் என்­றும் அவர் கூறி­யி­ருந்­தார்.

ஆனால் உலக வங்கி தற்­போது எடுத்­துள்ள இந்த முடி­வால் இலங்­கைக்குப் பேரிடி விழுந்­துள்­ளது. விரைவில் கடன் கிடைத்­தால் உட­னடி நிவா­ர­ணம் கிடைக்­கும் என்று காத்­துக்­கொண்­டி­ருந்த இலங்கை ஏமாற்­றம் அடைந்­துள்­ளது. ஏற்­கெ­னவே அத்தியாவசியப் பொருள்களுக்காக இலங்கை மக்­கள் கால் கடுக்க நீண்ட வரி­சை­களில் காத்­துக்­கி­டக்­கின்­ற­னர்.

விடிவு­கா­லம் எப்­போது பிறக்கும் என்று ஏங்­கித் தவிக்­கும் மக்­க­ளுக்கு என்ன பதில் கூறு­வது என்று தெரி­யாத சங்­கட நிலைக்கு இலங்கை அர­சி­யல்­வா­தி­கள் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

எரிபொருள் இல்லாததாலும் இருப்பதை மிச்சப்படுத்தும் நோக்கிலும் தலைநகர் கொழும்பில் உள்ள ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை பெட்ரோல் நிலையத்துக்குத் தள்ளிக்கொண்டே செல்கின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!