சுகி கணேசன் தொடர்ந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சுகி கணேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சமூகவலைதளத்தில் “மீ டு” புகார் தெரிவித்தது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இளையராஜாவும் சுகி கணேசனும் இணைந்து திரைப்படங்களில் வேலைகள் செய்யவுள்ளது போன்றவற்றை பற்றி சென்ற வருடம் மீண்டும் பேசப்பட்ட நிலையில் சுகி கணேசன் பற்றி லீனா மணிமேகலையும் சின்மயியும் கருத்துக்களை பதிவு செய்தனர். இதற்கு சுகி கணேசன் தனக்கு எதிராக சின்மயியும் லீனா மணிமேகலையும் குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாகவும் அதை சமூக ஊடகங்களான பேஸ்புக், கூகுள் டிவிட்டர், தி நியூஸ் மினிட் முதலிய நிறுவனங்கள் பரப்பியதால் அந்நிறுவனங்களுக்கு தடை விதிக்கக் கோரினார் சுகி.
மேலும் 10 லட்சம் கோடி இழப்பீடு தரவேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்தார். சுசி கணேசனின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகவும் அவரைப்பற்றி அவதூறு பரப்பிய ஊடகங்கள் லீனா மணிமேகலை மற்றும் சின்மயின் ஆகியோருக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுக்குறித்து ட்விட்டர் நிறுவனம் தரப்பில் கோரிக்கை விடுத்ததை நீதிமன்றம் நிராகரித்து லீனா மணிமேகலை, சின்மயி, கூகுள் பேஸ்புக், ட்விட்டர், தி நியூஸ் மினிட் உள்ளிட்டோர் எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்து இருக்கின்றது.