உலகம்

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு சிறந்த தொகுப்பாளருக்கான ‘எம்மி’ விருது

136views
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் இணைந்து ‘ஹையர் கிரவுண்ட்’ என்கிற பெயரில் இணைய தொடர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனம் ‘அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்’ என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்தது. இதில் உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காக்களின் சிறப்பம்சங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. மொத்தம் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த தொடரை ஒபாமாவே தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த தொடர் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது. இந்ந நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த தொகுப்பாளருக்கான விருது ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது.
எம்மி விருது பெறும் 2-வது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிவைட் டி.எய்சன்ஹோவர் கடந்த 1956-ம் ஆண்டு சிறப்பு எம்மி விருதை பெற்றார்.
ஒபாமா தனது 2 ஆடியோவை தொகுத்து வழங்கியதற்காக ஏற்கனவே கிராமி விருதுகளை பெற்றுள்ளார். மிச்செல்லும், தனது ஆடியோ புத்தகத்தை வாசித்ததற்காக கடந்த 2020-ல் கிராமி விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!