இந்தியா

அக்.,31க்குள் கல்லூரியில் இருந்து மாணவர்கள் வெளியேறினால் முழுக் கட்டணம்: யுஜிசி

54views

முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் கல்லூரிகளில் இருந்து அக்டோபர் 31ம் தேதிக்குள் வெளியேறினால் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான சி.யு.இ.டி., தேர்வு ஆகஸ்ட் 20ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்தத் தேர்வின் முடிவுகள் வெளியாக 15 நாட்கள் ஆகும். இதுபோல் நீட் தேர்வு முடிவுகளும் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் வேறு கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களுக்கு மாற விரும்பினால், அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை முழுமையாக திருப்பி தர வேண்டும் என அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.அதுபோல் சேர்க்கையை ரத்து செய்வதற்கு என தனியாக கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அக்டோபர் 2022ம் தேதி வரையில் கல்லூரிகள், பல்கலைகள் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!