தமிழகம்

உணவு, டிபன்பாக்ஸ், போர்வை வழங்கி குழந்தைகளை மகிழ்விக்க நடனம் ஆடி உற்சாகபடுத்திய நடிகர்.

127views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் உள்ள நாட்டுப்புற கிராமக் கலைஞர்கள் மிகவும் நலிவுற்ற நிலையில் ஏராளமானோர் உள்ளனர் அவர்களின் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசுகள் வழங்கிட பிரபல திரைப்பட நடிகர் “கங்கணம்” சௌந்தர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சிங்கம் 3,ரம்மி, ஜிகர்தண்டா, கொம்பன், கடம்பன் உள்ளிட்ட 32 படங்ககளில் வில்லன், மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்தவர், சௌந்தர்.  தற்போது “கங்கணம்” எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கடந்த கொரான காலகட்டங்களில் பொதுமக்கள் மற்றும் பார்வையற்றவர்கள், நலிவுற்ற கிராமிய கலைஞர்கள் என பல்வேறு அமைப்புகளுக்கு நலதிட்டங்கள் வழங்கியவர்.
அவனியாபுரம் பகுதியில் உள்ள நலிவுற்ற நிலையில் உள் கிராமிய கலைஞர்களின் குழந்தைகளை உற்காக படுத்தி கிறிஸ்மஸ் பரிசுகள் வழங்கினார்.
இறையில் கல்லுாரி பேராசிரியர் ஞானபிரபு, நடிகர் கணேசன் ஆகியோருடன் செளந்தர் கிறிஸ்மஸ் விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி குழந்தைகளை திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடி கிறிஸ்மஸ் தாத்தாவுடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
இதனால் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!