தமிழகம்

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள்

64views
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாட்டு, நடனம்,ஓவியம்,ஆடை அலங்காரம் போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  அறக்கட்டளை நிர்வாகி டாக்டர் பாலகுருசாமி வரவேற்று பேசினார்.  உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தலைமையில் ஐஸ்வர்யம் அறக்கட்டளை சேவை மனப்பான்மையுடன் செயல்படுகிறது.

முதியோர் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கு அனைத்து வசதியும் செய்து தருகின்றனர், மேலும் தரமான சிகிச்சை அளித்து எந்த குறைபாடும் இன்றி நோயாளிகளுக்கு பாதுகாப்பும்  அளித்து வருகின்றனர்.

வயதான பெற்றோரை நம் குழந்தைகளை போல பாதுகாக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் சாமிதுரை, பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் கோபி கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் மருத்துவர்கள், செவிலியர்கள்,மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!