தமிழகம்

தேனிமாவட்டம், போடி ராசிங்காபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

183views
தேனிமாவட்டம், போடி ராசிங்காபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 1முதல் 5 வகுப்புவரை படிக்கும், மாணவ மாணவிகளுக்கு நோட்டுகள், பேனா, பென்சில், சாமன்ட்ரி பாக்ஸ் உள்ளடக்கிய பொருட்கள் 100 பேருக்குவழங்கப்பட்டது.தேனி பாராகினிட் அன்பின் இல்ல நிறுவனர் மரியாதைக்குரிய ராஜரத்தினம் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பள்ளித் தலைமையாசிரியர் அவர்கள் பார்வதியம்மாள் அவர்கள் தலைமையில், ஆசிரியர்கள்சார்பாக நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக போடி தாலுகா காவல் ஆய்வாளர்.ரமேஷ்குமார் அவர்களும், கால்நடைமருத்துவர் ஜெயக்குமார் அவர்களும், வறியவர்களின் வழிகாட்டி கோகிலா முருகேசன் அவர்களும், உத்தமபாளையம்ஸ் வீட் ட்ரஸ்ட் ஜெயச்சந்திரன்.ஆர், ரகமத்துல்லா அவர்களும் சாலி டாடரியூத், எகியா அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை, ஆதார் சேவைப் பிரிவில் பணியாளர் பிரசாந்த் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க ராசிங்காபுரம்அரசு நடுநிலைப்பள்ளி தேர்வுசெய்யப்பட்டது.
செய்தியாளர் : A. சாதிக் பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!