தமிழகம்

டெல்லியிலிருந்து விமான மூலம் மதுரை வந்த மத்திய விமான போக்குவரத்து துறை நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி கே சிங் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு.

55views
மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு முழுமையாக ஒப்படைக்கவில்லை-மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை குறித்து மறு பரிசோதனை செய்யப்படுகிறது.
மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் கூடுதல் விமான சேவைகளை இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது –
அதன் அடிப்படையில் வெளிநாட்டு விமானங்கள் வந்து போவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகமான விமான சேவைகள் வந்ததும் அதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையில் துவங்கும்.
இதன் மூலம் மதுரை விமான நிலையத்தில் நள்ளிரவு சேவைகளுக்கான விமானங்கள் வந்தால் குறிப்பாக இரவு 2 மணி அளவில் விமானங்கள் வந்தால் அதற்கான ஏற்பாடுகள் செய்ய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தயாராக உள்ளது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே மத்திய சுங்க இலாகா மையம் சேவை செயல்பட்டு வருகிறது.
அதனால் மதுரை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டிய விஷயம் இல்லை.
இருந்தாலும் வெளிநாட்டு விமானங்கள் கூடுதலாக மதுரை வந்து செல்வது குறித்து அதற்கான பரிசீலனைகள் செய்வதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது
கொரான விதிமுறைகள் குறித்து மத்திய அரசு வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்ற அறிவித்துள்ளது.
இருந்தாலும் அதனை கடைபிடிக்க வேண்டியது பொதுமக்கள் தான்.
கொரோனா விதிமுறைகளை வந்து அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அதனை செயல்படுத்தி கடைபிடிக்க வேண்டியது பொதுமக்கள் தான் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!