தமிழகம்

தமுமுக அலுவலகத்திற்க்கு வருகை தந்த ஜமாத்தார்களை அன்புடன் வரவேற்ற தமுமுக நிர்வாகிகள்

68views
மரியாதை நிமித்தமாக தமுமுக அலுவலகத்திற்க்கு வருகை தந்த ஜமாத்தார்களை தமுமுக நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர்.
ஓசூர் மாநகர மற்றும் சுற்றுவட்டார முஸ்லிம்களை பற்றி கவலையோடு கலந்தாலோசித்த ஜமாஅத் நிர்வாகிகள் சமுதாயத்திற்கு தேவையான கல்வி,சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய தொழில் மற்றும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான பணிகளில் இணைந்து செயல்படுவது என்று கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடல் நிகழ்வில் ஓசூர் மாநகர ஜாமியா மஸ்ஜித் தலைவர் ஜனாப் ஏஹ்ஸான்உல்லா கான், ஜமாத்ஹே அஹ்லே ஹதீஸ் மஸ்ஜித் தலைவர் ஜனாப் சையத் ஷபியுல்லா, செயலாளர் ஜனாப் முகமது ஆதில், மதினா மஸ்ஜித் தலைவர் ஜனாப் ரியாஸ் மதினா மஸ்ஜித் நிர்வாகி ஜனாப் அப்துல் மாலிக் ஆகியோர்களுடன் தமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத்
மாவட்ட தலைவர் ஜாகிர் ஆலம், மமக மாவட்ட செயலாளர் ஜுபைர் அஹமத், தமுமுக மாவட்ட செயலாளர் ஏஜாஸ் கான், ஓசூர் மாநகர தலைவர் அப்துல்லா ஷரீப் (பேட்டு), மாநகர மமக செயலாளர் ஜபி, மாநகர தமுமுக செயலாளர் அப்சர், மாநகர பொருளாளர் ரோஷன் பாய், ஓசூர் மாநகர துணை தலைவர் திப்பு, சானசந்திரம் மமக கிளை செயலாளர் தாஜ்முல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!