தமிழகம்

கிராமத்தில் நாட்டு நலபணித்திட்ட சிறப்பு முகாம் ஒருவாரம் நடைபெற்றது

186views
மதுரை கூடல்நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் மேற்கு ஊராட்சி கோவில் பாப்பாகுடி கிராமத்தில் நாட்டு நலபணித்திட்ட சிறப்பு முகாம் ஒருவாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அந்த பள்ளி மாணவிகள் பல்வேறு வகையில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். முகாமின் இறுதி நாளான இன்று கோவில் பாப்பாகுடி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நடனம், நாடகம், பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஜோஸ்பின் அவர்கள், ஆசிரியை அருட் சகோதரி கேத்ரின் , ஒளிரும் மதுரை ஒருங்கிணைப்பாளர் துரை விஜயபாண்டியன், மற்றும் கோவில் பாப்பாகுடி ஊராட்சி வார்டு உறுப்பினர் சௌமியா , ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெகன் சிறிய புஷ்ப மல்லிகா மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.நாட்டு நலப் பணிதிட்ட சிறப்பு முகாமினை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சி. நீதிமணி , நாட்டு நலப்பணி திட்ட உதவி அலுவலர் எம், மரிய லூர்து மேரி நடத்தினார்கள்.
செய்தியாளர் : வி காளமேகம். மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!