தமிழகம்

வேலூர் அடுத்த ரத்தினகிரிபாலமுருகன் திருக்கோயிலில் தெப்பக்குளம் திறப்பு

103views
வேலூர் அடுத்த ரத்தினகிரியில் உள்ள முருகன் கோயிலில்விநாயகர் பூஜை புண்ணிய வசனம் விசேஷ சாந்தி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து நான்காம் கால பூஜை கோபுரம் கலசங்களுக்கு புனித நீர் தெளித்தல் வேத மந்திரங்கள் ஓத மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து ஆறு கோண தெப்பக்குளம் திறப்பு விழா முன்னிட்டு பூஜைகள் நடத்தப்பட்டு கங்கை யமுனை காவேரி கிருஷ்ணா பாலாறு உள்ளிட்ட பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்டு ரத்தனகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் முன்னிலையில் சச்சிதானந்த சுவாமிகள் குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் உள்ளிட்ட ஆன்மீகப் பெரியோர்களால் தெப்பக்குளத்தில் நீர் ஊற்றி தடாக பிரதிஷ்டை செய்தனர்.
விழாவில் வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மா வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் பெங்களூரு ஸ்ரீ ஓம்கார ஆசிரமம் மடாதிபதி மது சூதானந்த சாமிகள் ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி திருப்பத்தூர் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறநிலையத்துறை இணை ஆணையர்லட்சுமணன்பல்வேறு ஆதீனங்கள்,மடாதிபதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.  விழா ஏற்பாடுகளைகோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை சுவாமிகள் செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!